இந்தியாவிற்கு எதிராக அறிமுக போட்டியில் அசத்திய கார்ன்வால் – விவரம் இதோ

Rahkeem-Cornwall-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் நேற்று துவங்கியது.

Rahkeem

- Advertisement -

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.

ராகீம் கார்ன்வால் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரரான புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீசிய 90 ஓவர்களில் இவர் 27 ஓவர்களை வீசியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹோல்டர் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை இரண்டு விக்கெட்டுகளை கேட்ச் செய்து அசத்தினார்.

Rahkeem 1

ஒரு பக்கம் உடல் எடையை குறித்து அவரை கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சிக்க மறுபுறம் அவரது திறமையான பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மூலம் அவர் ரசிகர்களை ரசிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே அனைவரது கவனத்தையும் ராகீம் கார்ன்வால் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement