களமிறங்கிய முதல் போட்டியிலேயே பிரமாண்ட வரலாற்று சாதனை படைத்த ரகீம் கார்ன்வால் – சாதனை விவரம் இதோ

Rahkeem
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் சற்று நேரத்துக்கு முன் துவங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக 26 வயது ஆல்ரவுண்டர் ராகீம் கார்ன்வால் இன்று அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆனவுடன் இவர் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

அது யாதெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடை கொண்ட வீரராக இவர் அறிமுகமாகியுள்ளார். தற்போது 6.6 அடி உயரத்தில் 140 கிலோ என்ற பிரம்மாண்ட எடைகொண்ட வீரராக இவர் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி சார்பாக வார்விக் ஆம்ஸ்ட்ராங் என்ற வீரர் 133 கிலோ எடையுடன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் சாதனையை தற்போது ராகீம் கார்ன்வால் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement