ராகீம் கார்ன்வால் நேற்று இந்தியாவிற்கு எதிராக இறங்கியதும் செய்த அற்புதம் பற்றி – தெரியுமா ?

Rahkeem
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் நேற்று துவங்கியது.

Rahkeem 1

- Advertisement -

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் உலகின் அதிக எடை கொண்ட வீரரான ராகீம் கார்ன்வால் சிறப்பாக பந்து வீசினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சார்பாக நேற்று அதிகமாக ஓவர் வீசியதே இவர்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் நேற்று மட்டும் 27 ஓவர்கள் வீசி அவர் 69 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அவருடைய எடையை வைத்து கேலி செய்த அனைவருக்கும் அவரது பந்துவீச்சின் மூலம் அவர் பதிலளித்துள்ளார்.

Rahkeem 2

மேலும் அவரது முதல் டெஸ்ட் விக்கெட்டாக மிகப்பெரிய விக்கெட்டான இந்திய அணியின் வீரரான பூஜாவை அவர் 6 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். மேலும் முதல் தரப் போட்டிகளில் இவர் 55 போட்டிகளில் 2224 ரன்களும் 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எடை கொண்டு விமர்சிக்கப்படும் இவர் தனது திறமையால் ஆட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement