ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் 8 இந்திய வீர்ரகள்..! புது கேப்டன் யார் தெரியுமா ?

rahane
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் தொடரை உலக சாம்பைனான இந்தியாவுடன் மோத போகிறது ஆப்கானிஸ்தான் அணி. இந்த போட்டியில் இந்திய அணியை பிரபல இந்திய வீரர் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்துவர் என்று எதிர்ப்பாகபடுகிறது. கிரிக்கெட் உலகில் எடுத்துக் கொண்டால் நீண்ட வருடங்களாக ஒரு சில நாடுகள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றது. மேலும் டெஸ்ட் அங்கீகாரம் என்பதெல்லாம் ஐ.சி.சி அவ்வளவு எளிதாக வழங்கிவிடாது.

kohli

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது ஐ.சி.சி.டெஸ்ட் அங்கீகாரம்  பெற்ற  ஆப்கானிஸ்தான் அணி வரும் ஜூன் மாதம் இந்திய அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இந்தியா வருகிறது. மேலும் அந்த போட்டியில் இந்திய அணி சார்பில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்திய அணியில் தற்போதைய டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்படுவர் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. தற்போது ஐபில் போட்டிகள் முடிந்ததும் இந்திய அணி இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதனால் அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி இருப்பதால் ஆப்கானிஸ்தான் தொடரில் கோலி பங்கு பெற மாட்டார் என்பது உறுதி. மேலும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் பங்கு பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

virat

இருப்பினும் ஆப்கானிஸ்தானுடன் இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் அனைவரையும் இளம் வீரர்களாக போடுவது சரியாக இருக்காது. அதனால அணியில் யாரெனும் அனுபவமிக்க ஆட்டக்காரர்களாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். ரஹானே ஏற்கனவே டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக இருப்பதால் அவரை இந்த தொடரில் கேப்டனாக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று தேர்வுக்குழு யோசித்து வருகிறதாம்.

Advertisement