காத்திருங்கள் உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். 2 இளம் வீரர்களுக்கு ஆதரவாக பேசிய ரஹானே – விவரம் இதோ

Rahane
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

pant

- Advertisement -

இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனையை பல்வேறு தரப்பினர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணி வரலாற்று சாதனை படைத்த காபாவில் வீரர்கள் ஓய்வறையில் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அனைத்து வீரர்களையும் பாராட்டி இருக்கிறார். ரவிசாஸ்திரியை தொடர்ந்து இந்திய கேப்டன் ரஹானேவும் இந்திய வீரர்களிடம் உரையாடி இருக்கிறார். ரஹானே உரையாடிய வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இதில் இந்திய கேப்டன் ரஹானே :

rahane

“ இந்த வெற்றி நம் அனைவருக்கும் கிடைத்த வரம். அடிலெய்ட் மைதானத்தில் 36 ரன்களில் தோல்வி அடைந்ததற்கு பின் மெல்போர்ன் மைதானத்தில் பெற்ற வெற்றியை ஒரு போதும் மறக்க முடியாது.
இந்த வெற்றியில் அனைத்து வீரர்களின் பங்களிப்பும் இருக்கிறது. குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் கார்த்தி தியாகி ஆகியோரை நான் கூற விரும்புகிறேன்.

Kuldeep

ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் கூட நீங்கள் விளையாடவில்லை. நீங்கள் வருத்தம் அடைவதை நான் உணர்கிறேன்” காத்திருங்கள் உங்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று ரஹானே என்று உரையாடி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்திலும் வைரலாகி வருகிறது.

Advertisement