ஸ்டோக்ஸ் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை. அதனை நாங்கள் மதிக்கிறோம் – ரஹானே பேட்டி

rahane
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ் திடீரென இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

stokes

ஏற்கனவே ஐபிஎல் தொடரின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பிய ஸ்டோக்ஸ் கடந்த பல மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்து மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது அங்கு நடைபெற்றுவரும் “தி ஹன்ட்ரெட்” என்ற நூறு பந்துகள் கொண்ட போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் திடீரென தான் மனநலத்திற்கு முக்கியம் அளிக்க இருப்பதால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்தது.

Stokes

இந்நிலையில் ஸ்டாக்ஸ்ஸின் இந்த ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ள ரஹானே கூறுகையில் : பயோ பபுளில் நீண்ட நாட்களாக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மன ரீதியில் மிகவும் அதிகமாக இருக்கும். ஸ்டோக்ஸ் மனநிலை சார்ந்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஒரு வீரராக அவர்களின் சூழ்நிலை மற்றும் மனநிலையை புரிந்து கொண்டால் நிச்சயம் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவில் எந்தவித தவறும் இல்லை என்று உங்களுக்கு புரிய வரும் என்று ரகானே அவருக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Stokes

ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வீரர்கள் பயோ பபுள் என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே கிரிக்கெட் விளையாடி வருவதால் இது போன்ற மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement