RCB vs RR : இவர்தான் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அவுட் ஆக்குவார் என்று தெரியும். அவராலே வெற்றி கிடைத்தது – ரஹானே பெருமிதம்

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ரன்களை குவித்தார்.

rr

- Advertisement -

பிறகு 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்து இலக்கினை அடைந்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஷ்ரேயாஸ் கோபால் 4-1-12-3 ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரஹானே : இந்த போட்டியில் முதல் 3-4 ஓவர்களில் மைதானம் ஸ்லோ ஆனது தெரிந்தது. அதனால் எங்களது பந்துவீச்சாளர்கள் அதனை பயன்படுத்தி பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தினை கொடுத்தனர். மேலும், ஷ்ரேயாஸ் கோபால் எப்போதுமே கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு எதிராக நன்றாக பந்துவீசி வருவது நமக்கு தெரியும்.

Shreyas Gopal

இந்த போட்டியிலும் அவர்கள் இருவரையும் வீழ்த்தி துவக்கத்திலேயே அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், ஸ்மித், திரிபாதி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த மூன்று போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement