இந்திய அணியில் இவர் இல்லாதது எங்களுக்கு வருத்தம் தான். அவரை ரொம்ப மிஸ் பன்றோம் – ரஹானே பேட்டி

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. அடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாகவே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (நவ்.17) முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் பகலிரவு போட்டியாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் பெற்றிருந்தது.

Ashwin

- Advertisement -

இதில் விராட் கோலி 74 ரன்களை குவித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் 72.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் அஜின்கியா ரகானே தலைமையில் இந்திய அணி செயல்படும்.

விராட் கோலி இந்தியா திரும்பினாலும் இந்திய அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்ட ரோஹித் இந்த தொடரில் விளையாடுகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட முடியவில்லை.

ishanth

இதுகுறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நாங்கள் அனைவரும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக தீவிரமாக தயாராகுகிறோம். தற்போது எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் செம பார்மில் இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டையும் வீழ்த்துவார்கள்.

Ishanth

இருப்பினும் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் எல்லோரும் இஷாந்த் சர்மாவை மிஸ் செய்கிறோம்” என்று ரகானே வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Advertisement