அந்த வாய்ப்பு மட்டும் கெடைச்சா நான் கண்டிப்பா விளையாட தயார் – அஜின்க்யா ரஹானே வெளிப்படை

Rahane
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த 34 வயது அனுபவ கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே சமீப காலமாகவே தனது பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வருவதால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடாமல் இருக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஆனால் நாளடைவில் அவரது பேட்டிங் ஃபார்ம் சீரற்ற நிலையில் மாறவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது துணை கேப்டன் பதவி பறிபோனது. அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டிருந்தார்.

Rahane-4

- Advertisement -

அவருக்கு பதிலாக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் தொடர்ச்சியாக அவருக்கே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் ரஹானேவின் கரியர் ஓவர் என்று அனைவரும் கருதிய நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை அணியில் ஒப்பந்தமாகியுள்ள ரகானே மொயின் அலிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கினார்.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் சேசிங்கின் போது 158 ரன்கள் என்ற இலக்கினை துரத்திய நிலையில் 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் ரகானேவை மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்துள்ளன.

Rahane 1

ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே பும்ரா மற்றும் பண்ட் விளையாட முடியாத வேளையில் சமீபத்தில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மீண்டும் அனுபவ வீரரான ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற உள்ளதால் ஏற்கனவே அங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி நல்ல அனுபவமுடைய ரஹானேவை தான் அணியில் இணைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய ரஹானே மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்ததாவது :

இதையும் படிங்க : வீடியோ : 115 மீட்டர் மெகா சிக்ஸரை மைதானத்துக்கு வெளியே பறக்க விட்ட டு பிளேஸிஸ், விராட் – மேக்ஸ்வெல் அதிரடி, ஆர்சிபி ஸ்கோர் இதோ

நான் என்னுடைய முயற்சியை கைவிடப்போவதில்லை. தொடர்ச்சியாக என்னுடைய திறனை வெளிக்காட்டிக் கொண்டே இருப்பேன். ஒருவேளை மீண்டும் எனக்கு இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட தயாராக இருப்பேன் என ரகானே வெளிப்படையான பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement