இந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் தொடர்ந்து ஆடுவேன் – சீனியர் வீரர் பேட்டி

IND

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியின் காரணமாக அப்போது இந்திய அணியின் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்தன.

IND-1

மேலும் அது மட்டுமின்றி அந்த போட்டியுடன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்கு நாடு திரும்பினார். இதனால் மீதமுள்ள போட்டிகளில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். இந்த மூன்று போட்டிகளுக்கு முன்னர் விராட் கோலி இல்லாத இந்திய அணி தாக்குப்பிடிப்பது கடினம் என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் தோற்பது உறுதி என அனைவரும் கேலி செய்தனர்.

ஆனால் இவைகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ரகானே தலைமையிலான இளம் இந்திய அணி 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இரண்டு வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது.

rahane

அதன் பிறகு கோலி மற்றும் ரஹானேவின் ஆகியோரது கேப்டன்சியை ஒப்பிட துவங்கினர். மேலும் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானேவை நியமிக்க வேண்டும் என்றும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேட்டியளித்துள்ள ரஹானே இந்திய அணியின் கேப்டன் தலைமையில் மாற்றம் இருக்காது என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி தான் எங்களது கேப்டன். நான் துணை கேப்டன் தான் அவர் இல்லாத நேரத்தில் நான் அணியை வழி நடத்தினேன், வழி நடத்துவேன். எப்பொழுதும் கேப்டன் பொறுப்பு முக்கியமான ஒன்று. நான் சிறப்பாக திறம்பட செயல்பட்டுள்ளேன். எதிர்காலத்தில் நன்றாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் நானும் விராட்டும் நல்ல நண்பர்கள் இருவரும் இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளோம். எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. களத்தில் விளையாடும் போது நல்ல முறையில் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

Rahane

தவறான ஷாட் ஆடினால் இருவரும் பேசிக் கொள்வோம் மேலும் எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை. கோலி ஒரு அற்புதமான கேப்டன் களத்தில் சரியான முடிவுகளை எடுக்க கூடியவர் எனவே அவரே இந்திய அணியின் கேப்டன், நான் துணை கேப்டன் தான். என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் வராது என உறுதியாக நம்புகிறேன். அணி நிர்வாகமும் என் மீது அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறது என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.