RR vs KKR : இப்படி ஆடி பயனில்லை. வெற்றிக்கு இதனை செய்தே ஆக வேண்டும் – ரஹானே

ஐ.பி.எல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே அடித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 53 பந்துகளில் 73 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் மிக பொறுமையாக ஆடியதே அணியின் இந்த குறைவான ரன் கணக்கிற்கு காரணமாக அமைந்தது.

Smith

பிறகு ஆடிய கொல்கத்தா அணி இந்த 140 ரன்கள் இலக்கினை 13.5 ஓவர்களில் எளிதாக கடந்து வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக க்றிஸ் லின் 50 ரன்களை அடித்தார்.

- Advertisement -

chris

போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய ரஹானே : இந்த போட்டியில் 150-160 ரன்கள் வரை அடித்திருந்தால் நாங்கள் வெற்றிபெற்றிருக்க முடியும். பந்துவீச்சில் எங்களது அணியினர் சரியான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மேலும், பேட்டிங் வரிசையிலும் ஸ்மித் ஒருவரை தவிர நாங்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை.

rajasthan

இதுபோன்ற மைதானங்களில் விளையாட மேலும் பயிற்சி எடுத்து, தவறினை திருத்தி, வேகமாக ரன்களை குவித்து அடுத்த போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வருவோம். மேலும், டி20 போட்டிகளில் பொறுமையான இன்னிங்ஸ் ஆடக்கூடாது அதுவே தோல்விக்கு காரணம் என ரஹானே கூறினார்.

Advertisement