எனக்கு இந்த பேட்டிங் பொசிஷன் தான் கரெக்ட்டா இருக்கும்னு ரிக்கி பாண்டிங் சொன்னாரு. வெற்றியும் வந்தது – ரஹானே பேட்டி

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

DCvsRCB

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 35 ரன்களும் குவித்தனர். டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும், ஷிகர் தவான் 54 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக நோர்க்கியா தேர்வு செய்யப்பட்டார்.

dhawan

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய டெல்லி அணியின் முன்னணி வீரரான ரஹானே கூறுகையில் : ரிக்கி பாண்டிங் என்னிடம் வந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும்படி சொன்னார். மேலும் அந்த பொசிஷன் பேட்டிங் செய்வதற்கு ஏதுவானதாக இருக்கும் எனவும் என்னிடம் போட்டிக்கு முன்னதாக சொன்னார். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தவானுடனான எனது பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையே சிறப்பான கலந்துரையாடலில் இருந்தது.

dc

இலக்கை எவ்வாறு எட்ட வேண்டும் என்பதை தெளிவாக யோசித்து சரியான கிரிக்கெட் ஷாட்களை அடித்து விளையாடினோம். இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை இருப்பினும் இறுதியில் போட்டியை வென்றது மகிழ்ச்சி என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement