CSK vs KKR : இதை விட பெஸ்ட் இனிமே தான் வர போகுது. கொல்கத்தாவை கதறவிட்ட – ஆட்டநாயகன் ரஹானே அதிரடி

Rahane-csk
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியானது நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இப்படி சென்னை அணி வெற்றி பெற்ற இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணமாக அந்த அணியின் அனுபவ ஆட்டக்காரரான ரஹானேவின் சிறப்பான ஆட்டம் காரணம் என்றால் அது மிகையல்ல.

Rahane and Conway

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. இப்படி சென்னை அணி 235 ரன்கள் முக்கிய காரணமாக ரஹானே திகழ்ந்தார். ஏனெனில் சென்னை அணி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்து பிரமாதமாக ஆட்டத்தை துவங்கிய வேளையில் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த ரஹானே இரண்டாவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

அதனை தொடர்ந்து கான்வேவும் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற மூன்றாவது விக்கெட்டுக்கு சிவம் துபேயுடன் இணைந்து 85 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். பின்னர் துபேவும் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா உடன் 38 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். ஜடேஜாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தோனியுடன் விளையாடினார்.’

Rahane CSK

இப்படி மூன்றாவது வீரராக களம் புகுந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரகானே 29 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் 71 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களின் முடிவில் 186 ரன்கள் மட்டுமே குவிக்க 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது பேட்டிங்கில பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானேவிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் ரஹானே கூறுகையில் :

- Advertisement -

நான் இந்த போட்டியில் தெளிவான எண்ணத்துடன் விளையாடினேன். எப்பொழுதுமே மனதும் நினைப்பும் ஒரு நிலையில் இருந்தால் நாம் நினைப்பது அனைத்தும் நன்றாகவே நடக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் நான் என்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியாக விளையாட நினைத்தேன். மைதானமும் சற்று என்னுடைய கை கொடுத்ததால் என்னுடைய சிறப்பான துவக்கத்தை நல்ல ஆட்டமாக மாற்ற முயற்சித்தேன். அந்த வகையில் என்னுடைய அனைத்து வகையான ஷாட்களையும் முயற்சி செய்து பார்த்தேன். அதுவே அனைத்து முமென்ட்டத்தையும் தந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : தனது மொத்த கேரியரில் செய்யாததை சிஎஸ்கே அணியில் அசால்டாக 2 முறை செய்த ரகானே – 7 வருடங்கள் கழித்து மாஸ் கம்பேக்

இந்த ஆட்டத்தை நான் மிகவும் ரசித்தேன் என்றும் இது என்னுடைய பெஸ்ட் கிடையாது. இனிமேல் தான் என்னுடைய பெஸ்ட் வரப்போகிறது என்றும் எனக்கு தோன்றுகிறது என ரகானே கூறினார். மேலும் தோனியின் கீழ் பல ஆண்டுகாலம் நான் இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன். தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். அவரிடம் இருந்து பல்வேறு விடயங்களை நான் இன்றளவும் கற்றுக் கொண்டு வருகிறேன் என ரகானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement