கங்குலி கூறிய இந்த ஒரு வார்த்தையால் தான். எந்த மறுப்பும் கூறாமல் போயிட்டேன் – மனம்திறந்த ரஹானே

Rahane

ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அடைந்துவிட்டன. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு இந்த தொடருக்கான பயிற்சிகளும் ஆரம்பமாக உள்ளன. இந்த தொடரில் முதல் முறையாக கோப்பையை வெல்ல பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிடல் ஆகிய அணியில் மும்முரம் காட்டும் என்று பெறுகிறது.

ipl

அப்படி கோப்பையை வெல்ல முனைப்பில் உள்ள ஒரு அணியான டெல்லி கேப்பிடல் அணிக்காக தான் விளையாட இருப்பது குறித்து ரஹானே மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரஹானே மிகச்சிறந்த டெக்னிக்கல் பேட்ஸ்மென் என்பது நாம் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் 2011 முதல் 15 மற்றும் 18 19 ஆகிய 7 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரரான ரஹானே ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்பது மட்டுமின்றி அதிக ரன்களை குவித்தது இவர்தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டும் இவர் 2810 ரன்களை குவித்துள்ளார். மேலும் 122.65 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் ரன்களை குவித்துள்ளார். மேலும் 24 ஐபிஎல் போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியையும் வழி நடத்தியுள்ளார்.

rahane2

இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவர் கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாட இருக்கும் ரஹானே ராஜஸ்தான் அணியில் இருந்து ஏன் டெல்லி அணிக்கு மாறியுள்ளேன் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து ரஹானே பேசுகையில் :

- Advertisement -

முதல் முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கடந்த ஆண்டு கவுண்டி போட்டியில் இங்கிலாந்து ஹாம்ப்ஷைர் அணிக்காக விளையாட சென்று இருந்தேன். அப்போது உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளராக இங்கிலாந்து வந்திருந்த கங்குலி என்னை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வருவது குறித்து யோசிக்குமாறும் அதற்காக நன்றாக நேரம் எடுத்து உங்களது பதிலைச் சொல்லுங்கள் என்றும் கூறியிருந்தார்.

Rahane 1

நான் எனக்கான நேரத்தை எடுத்து இதுகுறித்து யோசித்தேன் மேலும் கங்குலி மற்றும் பாண்டிங் வழிகாட்டுதலின் கீழ் டெல்லி அணியில் ஒரு வீரராக விளையாடுவது எனது வளர்ச்சிக்கு உதவும் என்று நினைத்தேன். அதனால் நான் டெல்லி அணிக்கு மாறினேன் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி எனவும் ரஹானே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.