RR vs DC : பட்லர் இல்லை என்றால் என்ன அவருக்கு பதிலாக ரஹானே ஆடிய ஸ்வீப் ஷாட் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Rahane
- Advertisement -

நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ரஹானே அதிரடியான துவக்கத்தை தந்தார். வழக்கமாக பட்லர் தான் அந்த அணிக்கு அதிரடியான துவக்கம் தருவார். இந்த முறை பட்லர் இல்லாத அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்து சதமும் அடித்து அசத்தினார் ரஹானே. மேலும், அவர் அடித்த ஒரு ஸ்வீப் சிக்ஸ் பட்லரை நினைவுபடுத்தியது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

பட்லர் இல்லை என்றால் என்ன நான் இருக்கிறேன் ராஜஸ்தான் அணிக்கு என்பது போல் விளையாடினார் ரஹானே. ஆனால், ராஜஸ்தான் அணி அதிர்ஷ்டவசமின்றி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

Iyer

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித் 50 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக பண்ட் 36 பந்தில் 78 ரன்களை அடித்தார். தவான் 27 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.

Advertisement