ரோஹித்தை தொடர்ந்து ரஹானேவும் 12 லட்சம் அபராதமாக கட்ட போகிறார் – நிர்வாகம் அறிவிப்பு

Rahane
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தோனி 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

rahane

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 20 ஓவர்களை வீச குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு 12 லட்சம் அபராதமாக விதித்தது ஐ.பி.எல் நிர்வாகம். நேற்றைய போட்டியில் நடந்த இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

raina

ஏற்கனவே மும்பை அணி இதேபோன்று பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு 12 லட்சம் அபராதமாக விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement