Ajinkya Rahane : லின் அவுட் ஆகியும் விக்கெட் கொடுக்கல. ஆனா அம்பயர் பண்ணது ஓவர் – ரஹானே.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் குல்கர்னி பந்துவீச்சில் லின் போல்டாகியும் பைல்ஸ் விழாததால் அம்பயர் அவுட் தர மறுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Rahane

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே அடித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 53 பந்துகளில் 73 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் மிக பொறுமையாக ஆடியதே அணியின் இந்த குறைவான ரன் கணக்கிற்கு காரணமாக அமைந்தது.

பிறகு ஆடிய கொல்கத்தா அணி இந்த 140 ரன்கள் இலக்கினை 13.5 ஓவர்களில் எளிதாக கடந்து வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக க்றிஸ் லின் 50 ரன்களை அடித்தார்.

- Advertisement -

chris

இந்த போட்டியில் அம்பயரின் செயல்பாடு குறித்து பேசிய ரஹானே : இந்த போட்டியில் நாங்கள் அடித்த ரன்கள் 139 ரன்கள் தான். 150-160 ரன்கள் அடித்திருந்தால் இன்னும் போராடியிருக்கலாம். ஆனால், லின் 13 ரன்கள் இருக்கும்போது குல்கர்னி பந்துவீச்சில் போல்ட் ஆனார். அப்போது பைல்ஸ் இழாததால் அம்பயர் அவுட் கொடுக்காதது கூட ஏற்றுக்கொள்ள முடிந்தது.

RR

ஆனால், அந்த பந்தை பவுண்டரி அறிவித்தார். கண்ணுக்கு தெரிந்து இப்படி போல்ட் ஆகும்போது விக்கெட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்கலாம். ஏனெனில் இலக்கு சிறியது வீழ்ந்த விக்கெட் பெரியது இதனை நிச்சயம் கிரிக்கெட் கவுன்சில் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று ரஹானே கூறினார்.

Advertisement