ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ரஹானே..!

rahane
- Advertisement -

நடந்து வரும் ஐபில் தொடரில் 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில உள்ளது ராஜஸ்தான் அணி. மேலும் நேற்று நடந்த போட்டியில் இந்த அணி ஹைதராபாத் அணியுடன் மோதி தோல்வியை தழுவியது.மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை குவித்து. மேலும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி இந்த எளிதான இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது

53 பந்துகளில் 65 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட அணியின் வெற்றி இலக்கண பாதி ரன்களை அடித்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து.

rahane2

இதன் மூலம் ஒரு அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி 50 ரங்களுக்கு மேல் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தும் அணி வெற்றிபெற முடியாமல் போன மோசமான சாதனயை மீண்டும் படைத்துள்ளார் ரஹானே. இதற்கு முன்பு ஒரு முறை நடந்த ஐபில் போட்டியில் கூட தொடக்க வீரராக களம் இறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement