இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் டக் அவுட்டான 2 நட்சத்திர வீரர்கள் – வாழ்க்கை முடிந்ததா?

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசலா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொகாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது.

IND

- Advertisement -

அந்த டெஸ்ட் தொடருக்காக புதிய கேப்டனாக ரோகித் சர்மா ஷர்மாவும் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் செயல்பட உள்ள நிலையில் அவர்கள் தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ரன்கள் குவித்த தடுமாறி ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வரும் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் முதல் முறையாக அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் ரித்திமான் சஃகா மற்றும் இசாந்த் சர்மா ஆகிய மூத்த வீரர்களும் கழட்டி விடப்பட்டுள்ளார்கள்.

கோட்டைவிட்ட நட்சத்திரங்கள்:
கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக காலடி வைத்த சேடேஸ்வர் புஜாரா அந்த சமயத்தில் ஓய்வு பெற்ற ஜாம்பவான் ராகுல் டிராவிட் இடத்தை நிரப்பக்கூடிய ஒருவராக உருவெடுத்தார். டிராவிட் போலவே எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் பொறுமையுடன் பேட்டிங் செய்ய துவங்கிய அவர் எதிரணி பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்து அவர்களை களைப்படையச் செய்து ரன்களை அடிப்பவராக இருந்தார். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தனக்கே உரித்தான பாணியில் நிதான பேட்டிங் செய்த அவர் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார். ஆனால் அந்த தொடருக்குப் பின் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் புஜாரா திண்டாடி வருகிறார்.

pujara

அவரைப்போலவே கடந்த 2013 முதல் இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக உருவெடுத்த அஜிங்கிய ரஹானே தனது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் துணைக் கேப்டனாக பொறுப்பை ஏற்கும் அளவுக்கு உயர்ந்தார். காலப்போக்கில் இவரும் மிகச் சிறப்பான செயல்பாடுகளால் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி சரித்திர தோல்வியை பெற்றபோது கேப்டனாக இருந்த விராட் கோலி நாடு திரும்பிய நிலையில் அவர் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அந்த தொடரில் மெல்போர்ன் நகரில் நடந்த 2வது போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்ததுடன் இறுதியில் அந்த தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியாவிற்கு வென்று கொடுத்து சரித்திரத்தில் தனது பெயரை பொறித்தார். ஆனால் அதன்பின் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும் அனுபவத்தை மதித்து சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் உட்பட கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக புஜாரா மற்றும் ரகானே ஆகிய இருவருக்கும் ஏகப்பட்ட வாய்ப்புகளை இந்திய அணி நிர்வாகம் வழங்கியது. இறுதியில் அந்த அனைத்து வாய்ப்புகளையும் கோட்டைவிட்ட அவர்கள் தற்போது இந்திய அணியில் தங்களது இடத்தை பறி கொடுத்துள்ளார்கள்.

pujara 1

விரக்தியில் டக்-அவுட்:
அந்த நிலையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் டெல்லி மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்காக இந்த இருவரும் விளையாடி வருகிறார்கள். இதில் இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக நடந்த முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரஹானே சதமடித்து 113 ரன்களை விளாசினார். மறுபுறம் முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய புஜாரா முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2வத் இன்னிங்ஸ்சில் 91 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இருப்பினும் இவர்களின் பெயர்களை தேர்வு குழுவினர் இலங்கை தொடரில் சேர்க்கவில்லை. அதனால் விரக்தி அடைந்துள்ள இவர்கள் இன்று துவங்கியுள்ள ரஞ்சி கோப்பையில் 2-வது போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதில் கோவா அணிக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் 3 பந்துகளை எதிர்கொண்ட ரகானே டக் அவுட்டானார். மறுபுறம் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் புஜாரா 8 (6) ரன்களுக்கு நடையை கட்டினார்.

Pujara

வாழ்க்கை முடிந்ததா:
சமீப காலங்களாக பார்ம் இல்லாமல் தவித்து வரும் இவர்கள் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் காலடி வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த நேரத்தில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிக்க முடியாமல் மீண்டும் தடுமாறும் இவர்கள் டக்-அவுட்டாகி பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

- Advertisement -

மேலும் இனிமேல் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவிடம் தேர்வுக் குழுவினர் வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். அவருக்கு கூறப்பட்ட அதே வார்த்தைகள் ரஹானே மற்றும் புஜாராவுக்கும் பொருந்தும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 தொடர் : 10 அணிகள் பங்கேற்பதால் ஏற்பட்டுள்ள மாற்றம் – புதிய பார்மட் பற்றிய விரிவான அலசல்

ஏற்கனவே டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வந்த இவர்கள் தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தவிக்கும் வேளையில் ரஞ்சி கோப்பையிலும் சொதப்பி வருவதால் இனிமேல் இந்திய அணியில் புஜாரா – ரகானே ஆகியோரின் வாய்ப்பு முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

Advertisement