முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே வாய்ப்பு. கடும் அழுத்தத்தை சந்தித்துள்ள 2 சீனியர் வீரர்கள் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு பயணித்து தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த அனைத்து வீரர்களும் பலம் வாய்ந்த வீரர்கள் என்பதனால் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

INDvsRSA

- Advertisement -

அந்த அளவிற்கு அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த தொடரின் முதல் போட்டிக்கு பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் கடந்த பல தொடர்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள இவர்கள் இருவரும் இந்த முதல் போட்டியில் சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கு பதிலாக அவர்களது வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

Pujara

அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் விஹாரியும் தனது நிரந்தர இடத்தை தேடி வரிசையில் காத்திருக்கிறார். இப்படி இவர்கள் இருவரும் அணியில் இணைய தயாராக இருக்கும் வேளையில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தற்போது அழுத்தத்தை சந்தித்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஹர்பஜனுக்கு வாழ்த்துக்கூறிய ஸ்ரீசாந்த் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

இந்த தொடரில் அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் நிச்சயம் இந்த தொடரோடு அவர்களது இடம் பறிபோகும் ஆபத்து உள்ளது. எது எப்படி இருப்பினும் முதல் போட்டியில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement