
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அதற்கு முன்பாக இரு நாடுகளை சேர்ந்த முன்னாள் இந்நாள் வீரர்கள் காரசாரமான விவாதங்களை தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக விராட் கோலி 5 வருடங்களில் 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளது கவலையை கொடுக்கும் விஷயம் என்று முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.
அது ஒரு சர்வதேச வீரருக்கு சிறந்த செயல்பாடு அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அசத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அது பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு இந்திய அணி பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார் என்று கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார்.
அவருக்கு ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் முட்கள் போன்ற கேரக்டரைக் கொண்ட கௌதம் கம்பீர் தேவையின்றி வார்த்தைகளை விடுவதாக முன்னாள் வீரர் ப்ராட் ஹாடின் கூறியுள்ளார். மேலும் 2008ஆம் ஆண்டு ஷேன் வாட்சனை முழங்கையால் வேண்டுமென்றே இடித்து தள்ளியதற்காக கௌதம் கம்பீர் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார்.
எனவே இப்படி தேவையின்றி பேசினால் அதுபோன்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம் என்றும் கம்பீரை அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கம்பீர் எங்களுக்கு எதிராக ஒரு மனநிலையை பயன்படுத்தும் பாத்திரம். ஒரு பயிற்சியாளர் தன்னுடைய வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இருப்பினும் அவருடைய ரியாக்சன் முட்கள் நிறைந்ததாக இருக்கிறது”
“உண்மையில் உங்களுடைய பயிற்சியாளர் இது போன்ற சூழ்நிலையில் சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எங்களுக்கு எதிராக திட்டங்களை மட்டுமே உருவாக்க வேண்டும். அதன் பின் அதை என்னவென்று எனக்கு தெரியும் நான் சொல்கிறேன். இந்த வாரத்தின் பிற்பகுதி வரை காத்திருங்கள். ஒரு சிறிய முழங்கை மோதலால் கிடைத்த இடைநீக்கம் மற்றும் அபராதம் மீண்டும் கிடைக்கலாம்”
இதையும் படிங்க: 360 நாட்கள் கழித்து அபார கம்பேக்.. இதை செஞ்சா போதும் ஷமி ஆஸியில் இருப்பாரு.. பிசிசிஐ மகிழ்ச்சி தகவல்
“இது வேன் பெனட் ஸ்டைல் கோச்சிங் போல இருக்கிறது. உண்மையில் நான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி பேசவில்லை. நான் கௌதம் கம்பீர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் பற்றி பேசுகிறேன். கௌதம் கம்பீர் சில வார்த்தைகளை சொல்லி தன்னுடைய அணியிடமிருந்து அழுத்தத்தை நீக்கியுள்ளார். இது அவர் எந்தளவுக்கு முட்களாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.