360 நாட்கள் கழித்து அபார கம்பேக்.. இதை செஞ்சா போதும் ஷமி ஆஸியில் இருப்பாரு.. பிசிசிஐ மகிழ்ச்சி தகவல்

Mohammed Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயத்திலிருந்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரில் காயத்துடன் விளையாடிய அவர் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து குணமடைந்து அவர் கடந்த நியூசிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் மீண்டும் புதிதாக காயத்தை சந்தித்ததால் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் ஷமி தேர்வு செய்யப்படவில்லை. அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக பெங்கால் அணி விளையாடும் ரஞ்சிக் கோப்பை போட்டி நவம்பர் 13ஆம் தேதி இந்தூரில் துவங்கியது.

- Advertisement -

ஷமி கம்பேக்:

அந்தப் போட்டியில் அசத்தலாக பந்து வீசிய ஷமி 4 மெய்டன் உட்பட 19 ஓவரில் 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் 360 நாட்கள் கழித்து மீண்டும் ஷமி கிரிக்கெட்டில் அபார கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் முழுமையாக பந்து வீசினாலே ஷமியை ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “ஷமி இந்த ரஞ்சிகோப்பை போட்டியில் விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் ரஞ்சிக் கோப்பையின் அடுத்த ரவுண்டு போட்டிகள் 2025 ஜனவரி 23ஆம் தேதி தான் துவங்குகிறது. எனவே தேர்வாளர்கள் அவருடைய உடல் தகுதியை சோதிக்க வேண்டும். தற்போது அவர் 19 ஓவர்களை பல்வேறு பிரிவாக வீசினார்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஷமி:

“அதை விட முக்கியமாக அவர் 57 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தார். 90 டாட் பந்துகளை வீசினார். அடுத்ததாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச வேண்டும். அந்த இன்னிங்ஸில் அவர் 15 – 18 ஓவர்கள் வீசினாலே நல்ல செயல்பாடாக இருக்கும். ஆனால் அடுத்த நான்கு நாட்களில் அவர் மீண்டும் ஏதேனும் வலியை உணர்கிறாரா என்பதை வேண்டியது பெரிய சோதனையாக இருக்கும்”

இதையும் படிங்க: 2024-ஆம் ஆண்டை மறக்க முடியாத வருஷமாக மாற்றிய இந்திய அணி – வேறுயெந்த அணியும் படைக்காத சாதனை

“ஒருவேளை அந்த சோதனையில் அவரை பார்த்து விட்டு பச்சை கொடி காட்டினால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படுவார்” என்று கூறினார். இதிலிருந்து ஆஸ்திரேலிய முதல் போட்டியில் ஷமி விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் ஷமி விளையாடுவதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement