2024-ஆம் ஆண்டை மறக்க முடியாத வருஷமாக மாற்றிய இந்திய அணி – வேறுயெந்த அணியும் படைக்காத சாதனை

SIX
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. பின்னர் தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியானது :

2024-ஆம் ஆண்டு அசத்திய இந்திய அணி :

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் இவ்விவரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய மூன்றாவது போட்டியின் போது இந்திய அணி குறிப்பிட்ட சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை வைத்துள்ளது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 164-வது வெற்றியாக அமைந்துள்ளது. அதோடு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு அடுத்து தங்களது நூறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 13 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் இந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்‌ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. ஒரு அணி இப்படி ஒரே காலண்டர் ஆண்டில் 200 சிக்சர்களை அடிப்பது இதுவே முதல்முறை என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இதையும் படிங்க : எல்லாரும் அசத்தி வரும் வேளையில் சைலண்டாக சொதப்பி வரும் ரிங்கு சிங் – இதை கவனிச்சீங்களா

அதோடு நேற்று இந்திய அணி 200 ரன்களை கடந்த வேளையில் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு மட்டும் இந்திய அணி எட்டாவது முறையாக 200 ரன்களை கடந்து அதிகமுறை ஒரே ஆண்டில் 200 ரன்களை குவித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அது மட்டுமின்றி நேற்று திலக் வர்மா அடித்த சதத்தின் மூலம் இந்த ஆண்டு மட்டும் ஐந்து வெவ்வேறு இந்தியர்கள் ஒரே வருடத்தில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement