Virat Kohli : கோலி இந்த விடயத்தில் முதிர்ச்சி அற்றவர். அவர் நடந்துகொள்வது சரியல்ல – ரபாடா பேட்டி

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்தாலும் அந்த

Rabada
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்தாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

rabada

- Advertisement -

அதில் ரபாடா கூறியதாவது : இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ஒரு அற்புதமான வீரர் இருப்பினும் அவர் காலத்தில் பவுலர்களை பார்த்து கோபமாக நடந்து கொள்கிறார். ஏன் அவர் அவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது எனக்கு ஒன்று புரியவில்லை. ஆனால் அதன் காரணத்தை மட்டும் நான் அறிவேன்.

அது யாதெனில் பந்து வீச்சாளரை பார்த்து கோபப்படும் இயல்பு அவரிடம் உள்ளது. ஆனால் கோபப்படும்போது அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார் மேலும் இந்த கோபத்தை உந்துதலாக கொண்டு அவர் சிறப்பாகவும் ஆடுகிறார். இருப்பினும் அவர் அடையும் இந்த கோபம் முதிர்ச்சியற்ற செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் இவ்வளவு பெரிய வீரர் களத்தில் நிதானத்துடன் இருக்க வேண்டும்.

RABADA

ஆனால் அந்த நிதானத்தை இழந்து முதிர்ச்சியற்ற ஒரு வீரரை போன்று கோலி செயல்படுகிறார் என்று ரபாடா கூறினார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ரபாடா விளையாடினார். அப்போது பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கோலி ரபாடா பந்தில் ஒரு பவுண்டரி அடித்து அதன் பிறகு அவரைப் பார்த்து கோபமாக ஏதோ பேசினார். அதன் காரணத்தினாலேயே தற்போது ரபாடா விராத் கோலி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement