இந்திய அணியில் இவர் எனக்கு சவாலாகவும், இவர் எனக்கு எதிரியாகவும் இருப்பார்கள் – ரபாடா ஓபன் டாக்

Rabada
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Vihari-1

- Advertisement -

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்திய அணி உடனான இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது அந்த மைதானம் சற்று சவாலாக இருந்தது. இருந்தாலும் அந்த மைதானத்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்.

அதற்கடுத்து தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள நாங்கள் இந்தியாவிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். மேலும் இந்திய மைதானங்களில் முதன்முறை நான் விளையாடும் போது எப்படி விளையாடுவது என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்கு அடுத்து சில ஆட்டங்களில் நான் இந்தியாவில் விளையாடி உள்ளேன்.

rabada

எனவே இம்முறை சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு எதிராக இந்த தொடரை கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன். ஆனால் அணியின் மூத்த வீரரான டூப்லிஸ்ஸிஸ் இடம்பெறவில்லை. மேலும் தாஹிர் மற்றும் ஆம்லா ஆகியோர் ஓய்வு பெற்றதால் இந்த தொடரில் அவர்கள் இடம்பெறவில்லை. எனவே இளம் வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். தென்னாபிரிக்க அணிக்கு சற்று சவாலான விடயமாக இது அமையும்.

Rabada

மேலும் இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலியை எனது சவாலாகவும், ஜஸ்பிரித் பும்ரா எனது எதிரி போட்டியாளராக நான் கருதி இந்த தொடரில் பங்கேற்க உள்ளேன். இந்த தொடரில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை நான் அளிக்க அனைத்தையும் தயார்ப்படுத்தி வருகிறேன். இந்த தொடரில் இந்திய அணியை நான் அதிகம் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன். என்னுடைய திறமையை மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் முயற்சிப்பேன் என்று ரபாடா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement