டிகாக்கை ஆபாசமாக திட்டிய ரபாடா. என்ன பிரச்சினை அவங்களுக்குள்ள தெரியுமா ? – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

Umesh

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தென்னாபிரிக்க வீரர்கள் திணறினர். மேலும் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவுக்கும், விக்கெட் கீப்பர் டிகாக்கும் இடையே சிறிய வார்த்தை மோதலும் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றைய போட்டியில் முதல் இனிங்ஸில் போது 123 வது வரை தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட ஜடேஜா பந்தை அடிக்க நேராகச் சென்ற அந்தப் பந்து ரபாடாவின் கைகளுக்கு சென்றது/ உடனே அந்த பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி ரபாடா வீசினார்.

Rabada

ஆனால் அதை டிகாக் கவனிக்கவில்லை பந்து மேலே சென்றதால் கோலியும், ஜடேஜாவும் விரைவாக ஒருரன் ஓடினார்கள். இதனால் கோபமான ரபாடா பந்தை கவனி என்று டிகாக்கை ஆபாசமாக திட்டினார். பதிலுக்கு டிகாக்கும் ரபாடா வை நோக்கி கத்த இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது உடனே கேப்டன் டூப்லஸ்ஸிஸ் இருவரையும் சமாதானப்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.