இந்திய அணியின் வீரரான இவரே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் – ரபாடா புகழாரம்

Rabada

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Iyer-2

இந்நிலையில் அந்த அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்திய அணி உடனான இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது அந்த மைதானம் சற்று சவாலாக இருந்தது. இருந்தாலும் அந்த மைதானத்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்.

அதற்கடுத்து தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள நாங்கள் இந்தியாவிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொறுத்தவரை உலக அளவில் தற்போதைய சிறந்த பேட்ஸ்மென் என்றால் அது விராத் கோலி மட்டும்தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

Rabada

அவர் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு சாதனைகளை செய்து உள்ளார். அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்துள்ளார். இந்த தொடரில் அவர் எனக்குப் பெரும் சவாலாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் அவருக்கு எதிராக பந்து வீச நான் காத்திருக்கிறேன். இந்த தொடர் எங்களுக்கு ஒரு முக்கியமான தொடராக அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இந்த தொடரினை வெற்றி பெற விரும்புகிறோம் என்று ரபாடா கூறியது குறிப்பிடத்தக்கது.