வீடியோ : அதிவேக புல்டாஸை வீசி கெயிலின் ஸ்டம்புகளை பறக்கவிட்ட ரபாடா – வைரலாகும் வீடியோ

Gayle

ஐபிஎல் தொடரின் 29வது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

dcvspbks

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தற்போது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சிம்ரன் சிங் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும் அதிரடி வீரரான கெயில் களமிறங்கினார்.

ராகுல் அணியில் இல்லாத வேளையில் ரன் ரேட்டை அதிகரிக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதை உணர்ந்த கெயில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமின்றி 9 பந்துகளை சந்தித்த கெயில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என 13 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

gayle

அதிலும் குறிப்பாக களமிறங்கிய பந்திலிருந்து அதிரடியாக விளையாடிய கெயில் அவுட் ஆவதற்கு முந்தைய பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசி இருந்தார். அதற்கடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க தயாராகிய கெயில் ரபாடா வீசிய அதிவேக புல்டாஸை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரது அந்த புல்டாசை கணிக்க முடியாமல் வேறு வழியின்றி கிளீன் போல்டானார். யார்க்கர் வீச நினைத்த ரபாடா வேகமாக வீச அந்த பந்து ஃபுல் டாஸ் ஆக மாறி அதிவேகத்தில் ஸ்டம்பை நோக்கி சென்றதால் கெயிலால் எதுவும் செய்ய முடியவில்லை.

- Advertisement -

அந்த பந்து ஸ்டம்பில் பட்டதும் ஸ்டம்ப்கள் தெறித்தன. கெயில் அவுட்டான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :