அந்த முடிவை கேப்டனாக விராட் கோலி எடுக்கல, சஞ்சு சாம்சன் தான் எடுத்தாரு – 2020 நிகழ்வை பகிர்ந்த ஸ்ரீதர்

Sanju Samson Virat Kohli r sridhar
- Advertisement -

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானாலும் 2வது போட்டியை 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்து 2021 வரை குப்பை போல பயன்படுத்தப்பட்டு வந்தார். இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக பெற்ற வாய்ப்புகளில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று சிறப்பாகவே செயல்பட்ட அவர் நல்ல ஃபார்மில் இருந்தும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்ட நிலையில் சமீபத்திய இலங்கைத் தொடரிலும் சேர்க்கப்படாதது ரசிகர்களை கொதிக்க வைத்துள்ளது.

Sanju Samson

- Advertisement -

இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் உட்பட யாரையும் குறை சொல்லாத அவர் தமது இடத்தில் விளையாடும் வீரரும் நாட்டுக்காக விளையாடுவதில் தாம் பெருமையடைவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அந்த வகையில் சுயநலமின்றி அணிக்காக விளையாட காத்திருக்கும் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அணி நலனுக்காக சஹாலை விளையாட வைக்க பயிற்சி ரவி சாஸ்திரியை சம்மதிக்க வைத்த தருணத்தை பற்றி அப்போதைய இந்திய அணியில் துணை பயிற்சியாளராக இருந்த ஸ்ரீதர் கூறியுள்ளார்.

சுயநலமற்ற சஞ்சு:
அதாவது கடந்த 2020 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் கான்பெராவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 161/7 ரன்கள் குவித்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 44* (23) ரன்களை விளாசி இந்தியாவை காப்பாற்றினார். ஆனால் அந்த இன்னிங்ஸின் போது தலையில் அடி வாங்கிய அவர் 2வது இன்னிங்ஸில் விளையாட முடியாத நிலைமை சந்தித்த போது விதிமுறைப்படி அவருக்கு பதில் சஹாலை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தியது.

Langer

அதன் பின் பந்து வீச்சில் அசத்திய சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் தலையில் அடிபட்டும் 20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜடேஜா எப்படி பந்து வீச வராமல் போகலாம் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நடுவரிடம் முறையிட்டதும் அதற்கு நடுவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததும் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்நிலையில் அப்போட்டியில் ஜடேஜா காயமடைந்த நிலையில் சஹால் பந்து வீசினால் வெற்றி கிடைக்கும் என நினைத்து அவரை தேர்வு செய்யுமாறு ரவி சாஸ்திரியிடம் சஞ்சு சாம்சன் தெரிவித்ததாக ஸ்ரீதர் கூறியுள்ளார். இது பற்றி தனது சுயசரிதையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நான் எங்களுடைய பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா பேட்டிங் வருவதற்கு முன்பாக பீல்டிங் செட்டிங் செய்வதற்கான திட்டங்களுடன் தயாராக இருந்தேன். அப்போது எனது அருகில் சஞ்சு சாம்சன் மற்றும் மயங் அகர்வால் அமர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் மாற்று வீரரை பற்றி நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த போது “சார் பந்து ஜடேஜாவின் தலையில் அடிபட்டுள்ளதால் அவருக்கு பதில் நாம் ஏன் மாற்று வீரரை கேட்கக் கூடாது? அவருக்கு பதிலாக நாம் ஏன் மற்றொரு பவுலரான சஹாலை பயன்படுத்தக் கூடாது? என்று சஞ்சு சாம்சன் என்னிடம் கூறினார். அப்போது தான் அந்த இளம் வீரருக்குள் இருக்கும் ஒரு கேப்டனை நான் பார்த்தேன்”

Sridhar

“அத்துடன் உங்களது இந்த கருத்துக்களை ரவி சாஸ்திரியிடம் விவரிக்குமாறு அவரிடம் நான் சொன்னேன். அவரது கருத்தை கேட்ட ரவி சாஸ்திரியும் நன்மை இருந்ததால் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அந்த வகையில் சஹாலை விளையாட வைக்க முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் யோசித்த அந்த தருணம் எனது வாழ்வில் அவரைப் பற்றி மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தியது. அது ஒரு தலைவராக தனது அணியை பற்றி அவர் சிந்திக்கும் தன்மையை காட்டியது”

இதையும் படிங்க:
IND vs NZ : எங்க டீம் இப்போவே வீக்கா தாங்க இருக்கு. வெளிப்படையா பயத்தை தெரிவித்த – நியூசி கேப்டன்

“அவர் எப்போதும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் அணிக்காக யோசிக்கிறார். அது தான் அவரைப் போன்ற ஒரு மனிதரின் குணத்தை வெளிக்காட்டிய தருணமாகும். அது மாற்றி யோசிப்பதற்கான திறந்த எடுத்துக்காட்டாகும். அந்த முடிவை ரவி சாஸ்திரி அல்லது விராட் கோலி கூட சிந்திக்கவில்லை. ஆனால் அதை உடனடியாக சிந்தித்த அவர் அணியினருடன் தொடர்பு கொள்வதில் சிறந்து விளங்குவதாக நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement