இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர்தான். 17 வயது இளம் வீராங்கனையை பாராட்டிய – பீல்டிங் கோச்

Sridhar
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான சேவாக் ஒருநாள் போட்டிகளை போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியான துவக்கத்தை அளிப்பதில் கில்லாடி. அவரது அதிரடியை காணவே ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளை ஆர்வமாக பார்த்த காலமும் உண்டு. அந்த அளவிற்கு துவக்க வீரராக களமிறங்கி டெஸ்ட் போட்டிகளில் தனது அதிரடி வெளிப்படுத்தி வந்த அவருக்குப் பின்னர் வந்த வீரர்கள் பலர் அதிரடியாக விளையாடினாலும் இன்றளவும் சேவாக் போன்று அதிரடியான துக்கத்தை கொடுக்கும் வீரர் இந்திய அணியில் இல்லை என்றே கூறலாம்.

Sehwag

- Advertisement -

அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக சேவக் தனது அதிரடி மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுள்ளார். இந்நிலையில் இந்திய ஆண்கள் அணியில் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுகையில் அவ்வப்போது சேவாக்குடன் ஒப்பிடப்படுவார்கள். அந்த வகையில் ஏற்கனவே ப்ரித்வி ஷா அடுத்த சேவாக் என புகழப்பட்டார். ஆனால் அவர் இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

ஆனால் தற்போது அவரை தாண்டி இந்திய மகளிர் அணியின் வீராங்கனை ஒருவரை பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அடுத்த சேவாக் என புகழ்ந்துள்ளார். அதன்படி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் விளையாடிய ஷபாலி வர்மா தனது அறிமுக போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 152 பந்துகளில் 96 ரன்கள் குவித்து அசத்தினார்.

shafali

சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட அவர் தற்போது 2வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஷபாலி வர்மா இரண்டாவது இன்னிங்சில் 68 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். 17 வயதான அவர் அறிமுக போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்து உலக ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இனி வருங்காலத்திலும் அவர் மிகப் பெரிய நட்சத்திரமாக வலம் வருவார் என்று கூறப்படுகிறது.

shafali 1

இந்நிலையில் அவரை பாராட்டிய ஸ்ரீதர் கூறுகையில் : ஷபாலி வர்மாவின் ஆட்டம் அப்படியே சேவாக்கை நினைவுபடுத்துகிறது. முதல் இன்னிங்சில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் நிச்சயம் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் அடித்து விளையாடும் சரி, ஆப் சைடில் விளையாடும் போதும் சரி சேவாக் எப்படி விளையாடுவாரா அதேபோன்ற ஆட்டத்தை விளையாடி வருகிறார் என்று அவர் புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement