- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் புதுசா கொடுத்த 2 பொறுப்பை காப்பாத்த உழைக்கிறேன்.. ஆட்டநாயகன் ஜடேஜா பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இந்தியா 448/5 ரன்கள் அடித்து தன்னுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, துருவ் ஜுரேல் 125, ரவீந்திர ஜடேஜா 104* ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முன்பை விட மோசமாக விளையாடி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜடேஜா:

அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 38 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சதத்தை அடித்து 4 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் தமக்கு துணை கேப்டன்ஷிப் பொறுப்பு மற்றும் 6வது இடத்தில் பேட்டிங் செய்யும் 2 புதிய வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். அதில் அசத்துவதற்காக கடினமாக உழைப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னுடைய பேட்டிங்கில் நான் கடினமாக உழைத்து வருகிறேன்”

- Advertisement -

2 புதிய பொறுப்பு:

“எங்களுக்கு 2 மாதங்கள் ஓய்வு கிடைத்தது. அப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இல்லாததால் பெங்களூருவுக்கு சென்று என்னுடைய ஃபிட்னஸ் மற்றும் பேட்டிங்கில் கடினமாக உழைத்தேன். சில வருடங்களுக்கு முன்பு வரை நான் 8, 9வது இடங்களில் விளையாடினேன். ஆனால் தற்போது நான் 7வது இடத்தில் விளையாடுவதால் என்னுடைய ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்க தயாராகிறேன். செம்மண் பிட்ச்சில் நிறைய பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும்”

இதையும் படிங்க: டாஸ் முக்கியம் இல்ல.. எங்களுக்கு இதுதான் முக்கியம்.. வெற்றிக்கு பின்னர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய – கேப்டன் கில்

“எனவே அதில் பேட்டிங், பவுலிங் செய்ய நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன். துணை கேப்டன்சிப் பொறுப்பிற்காக கேப்டன், பயிற்சியாளர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். துணை கேப்டன் எப்போதும் அணியின் ஸ்பெஷல் மெம்பர். அந்த பொறுப்பில் தேவைப்படும் போது செயல்பட நான் தயாராக இருக்கிறேன். கடந்தக் காலங்களில் எங்கள் அணியின் ஸ்பின் பவுலிங் தலைவராக அஸ்வின் இருந்தார். தற்போது குல்தீப், சுந்தர் ஆகியோரும் நிறைய போட்டிகளில் விளையாடுகின்றனர். சொந்த அனுபவத்துடன் கடினமாக உழைக்கும் அவர்களுக்கு நான் தேவையற்ற அறிவுரை வழங்க தேவையில்லை” என்று கூறினார்.

- Advertisement -