இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் தோல்விகளை சந்தித்தது. அடுத்ததாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அந்தத் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா தொடர்ச்சியாக அசத்துவதில்லை. எனவே 2027 உலகக் கோப்பைக்கு இப்போதிலிருந்தே ஆல் ரவுண்டரை உருவாக்க புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவெடுத்துள்ளார். அதனால் ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவை கழற்றி விட அவர் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
அஸ்வின் போல:
அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கம்பீர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. சமீபத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வு கொடுத்த கௌதம் கம்பீர் 500+ விக்கெட்டுகளை எடுத்திருந்தும் அஸ்வினை தேர்ந்தெடுக்கவில்லை. அந்த வகையில் கம்பீர் கழற்றி விட்டதால் ரவிச்சந்திரன் அஸ்வின் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றார்.
அதே போல தற்போது ரவீந்திர ஜடேஜாவையும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் கழற்றி விட தயாராகியுள்ளார் என்று சொல்லலாம். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க இந்திய அணி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
ஒன்டே வாய்ப்பு:
மறுபுறம் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரில் ஜடேஜா மிடில் ஆர்டரில் விளையாடி சதத்தை பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க உள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி தெரிவித்தது பின்வருமாறு. “இவை அனைத்தும் தேர்வாளர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குவதை பற்றியதாகும்”
இதையும் படிங்க: திறமை இருந்தும் வீணடிக்குறாரு.. இதை செஞ்சா ரிஷப் பண்ட் எல்லா மேட்ச்லயும் 100 அடிக்கலாம்.. அஸ்வின் அட்வைஸ்
“அவர்கள் ஜடேஜாவை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான முடிவா அல்லது நகரலாமா என்பது பற்றி விவாதிக்க உள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் தொடர்ச்சியாக பேட்டிங்கில் அசத்த தடுமாறுகிறார். அதே சமயம் அவருடைய பவுலிங் திடமாக இருக்கிறது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரிடமிருந்து நகர அவசியம் வந்துள்ளது. எனவே கடினமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படலாம். டெஸ்ட் போட்டிகளில் காரணமாக இங்கிலாந்து தொடரை முன்னிட்டு இப்போதும் ஜடேஜாவுக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.