ஷ்ஷ் வாயை மூடுங்க.. கேப்டன்ஷிப் பற்றி தோனியின் பெயரை இழுத்த ராஜாமணியை அமைதியாக்கிய அஸ்வின்

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முயற்சித்து வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் வென்ற சென்னை அதற்கடுத்த போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக மும்பையை சந்திக்கிறது.

முன்னதாக தமிழக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறை சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணிக்காக அவர் களமிறங்கியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த வாய்ப்பில் முதல் 6 போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய அஸ்வின் 7வது போட்டியில் நீக்கப்பட்டார்.

- Advertisement -

வம்பு எதற்கு:

மறுபுறம் இந்த வருடம் முதல் முறையாக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் நூர் அகமது அபாரமாக பௌலிங் செய்து ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். ஆனால் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருக்கும் போது சிஎஸ்கே நூர் அகமதை வாங்கியிருக்கக்கூடாது என்று அஸ்வின் யூடியூப் சேனலில் பிரபல அனலைஸ்ட் பிரசன்னா தெரிவித்தார். அதை கேட்ட ரசிகர்கள் சிஎஸ்கே அணியிலிருந்து கொண்டு அவர்களுக்கு எதிராகவே பேசுகிறீர்களா என்று விமர்சனம் செய்தனர்.

அதனால் இனிமேல் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் பேசப்போவதில்லை என்று அஸ்வின் அறிவித்தார். அந்த சூழ்நிலையில் சமீபத்திய அஸ்வின் யூடியூப் சேனல் வீடியோவில் ராஜாமணி விருந்தாளராக கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் கடந்த வருடம் வரை ராஜஸ்தான் அணியில் துணைப் பயிற்சியாளராக இருந்தார்.

- Advertisement -

அமைதியாக்கிய அஸ்வின்:

அந்த வீடியோவில் அவர் கேப்டன்ஷிப் பற்றி பேசியது பின்வருமாறு. “அஸ்வின் நீங்களும் அணியை நிறைய வழி நடத்தியுள்ளீர்கள். நீங்கள் கேப்டனாக வழி நடத்திய அணியில் டிஎன்பிஎல் தொடரில் கோப்பையை வென்றது. அந்த வகையில் வெற்றிக்கு கேப்டன்ஷிப் என்பது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அந்த கேப்டன் ஸ்ரேயாஸ், சஞ்சு சாம்சன், தல தோனி போல இருப்பார்கள்” என்று பேசிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணிக்கெதிரான 2 விக்கெட்டுகள் மூலம் பஞ்சாப் அணிக்காக வரலாற்று சாதனையை நிகழ்த்திய – அர்ஷ்தீப் சிங்

அப்போது குறுக்கிட்ட அஸ்வின். “ஷ்ஷ். ஷ்ஷ்” என்று வாய் மேல் கை வைத்து சிஎஸ்கே பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு சொன்னார். அதற்கு ராஜாமணி. “இல்லை. நீங்கள் தான் பேசக்கூடாது. நான் ஒரு ரசிகனாக பேசுவேன்” என்று பதிலளித்தார். அதற்கு அஸ்வின். “ராஜஸ்தான் அணியில் இருந்த போது அந்த அணியைப் பற்றியும் நான் எப்போதும் பேசியதில்லை” என்று கூறினார்.

Advertisement