- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கில், கம்பீர் அவர விளையாட வெச்சா.. இந்தியா 20 விக்கெட்ஸ் எடுத்து 3 வெற்றி உறுதி.. அஸ்வின் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. எனவே இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக பேட்டிங், பவுலிங் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தாத சர்துல் தாக்கூரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன. முன்னதாக முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்த இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால் பவுலிங் துறையில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் கை கொடுக்கத் தவறியதால் 20 விக்கெட்டுகளை எடுக்காத இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

- Advertisement -

20 விக்கெட்ஸ் எடுக்க:

இந்நிலையில் இந்திய அணி 20 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வேண்டுமெனில் குல்தீப் யாதவ் விளையாடுவது அவசியம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்த வரை குல்தீப் யாதவ் விளையாடினால் இந்தியா 2 – 3 போட்டிகளில் வெல்வது உறுதி என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கம்பீர், கில் ஆகியோர் 20 விக்கெட்டுகள் எடுக்கும் ஈடுப்பாட்டில் வலுவான கேள்வி இருக்கிறது. அவர்களுடைய அணுகுமுறையை 2வது போட்டி காண்பிக்கும். உண்மையிலேயே நீங்கள் 20 விக்கெட்டுகள் எடுக்கும் ஈடுபாட்டுடன் இருந்தால் குல்தீப் விளையாட வேண்டும். பிட்ச்சில் நிறைய புற்கள் இல்லாத பட்சத்தில் அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும். அதற்காக யாரை வேண்டுமானாலும் நீக்குங்கள்”

- Advertisement -

2 – 3 வெற்றி கிடைக்கும்:

“குல்தீப் விளையாடினால் இங்கிலாந்தின் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் அடிக்க மாட்டார்கள். குல்தீப் உங்களுக்கு 2 – 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற இருப்பதற்கு உதவுவார். ஏனெனில் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவார். தாக்கூருக்கு பதிலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரசித் கிருஷ்ணாவை நான் தொடர்ந்து விளையாட விரும்புவேன்”

இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? மவுனம் கலைத்து பதிலளித்த – சுப்மன் கில்

“ஏனெனில் அவர் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தம்மால் நன்றாக பவுலிங் செய்ய முடியும் என்பதைக் காண்பித்தார். இடது கை பவுலர் கோணத்தை ஏற்படுத்துவார் என்பதன் அடிப்படையில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவதற்கு தகுதியானவராகவே இருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரிதாக எதையும் நிரூபிக்கவில்லை. எனவே ஆகாஷ் தீப் அணியில் இருப்பதை மறந்து விடாதீர்கள். பும்ரா ஓய்வெடுக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவரை விளையாட வைக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -