இரண்டாவது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? மவுனம் கலைத்து பதிலளித்த – சுப்மன் கில்

Gill and Bumrah
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 2-ஆம் தேதி துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸின் போது விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

மைதானத்தின் தன்மையை பொறுத்தே அணித்தேர்வு இருக்கும் : சுப்மன் கில்

முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்து இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளதால் இனிவரும் போட்டிகளில் பும்ரா அவசியம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதனால் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஒருவேளை இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாடவில்லை என்றால் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. ஆனாலும் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறயிருக்கும் இரண்டாவது போட்டிக்கு பும்ரா அவசியம் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பும்ராவின் நிலை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : பும்ராவை இரண்டாவது போட்டியில் விளையாட வைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது போட்டிக்கு முன்னர் மாலை தான் தெரியவரும். ஏனெனில் மைதானத்தை கணக்கில் கொண்டே நாங்கள் அணியை தேர்வு செய்ய உள்ளோம். அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் சரியாக இருக்கும் பவுலிங் காம்பினேஷனை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும்.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் இரண்டாவது போட்டியில் விளையாடும் அளவிற்கு பும்ரா தயாராகத்தான் இருக்கிறார். ஆனாலும் பணிச்சுமை காரணமாக அவரை விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசித்து வருகிறோம். இருப்பினும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் சூழலை கருத்தில் கொண்டே அவரது இடம் குறித்த முடிவு உறுதியாகும் என்று கூறியுள்ளார். அதுதவிர்த்து ஏற்கனவே லீட்ஸ் போட்டியிலேயே 2 சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடி இருக்கலாம் என தோன்றியது. ஆனால் அங்கு அதனை செய்ய தவறிவிட்டோம்.

இதையும் படிங்க : இதுவரை வெற்றியே கிடைக்காத மைதானத்தில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் – சாதனை நிகழ்த்துமா?

எனவே எட்ஜ்பேஸ்டனில் நிச்சயம் சூழலுக்கு ஏற்ப 2 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என சுப்மன் கில் கூறியுள்ளார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது பும்ரா விளையாட தயாராக இருந்தாலும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடனே இந்திய அணி செல்லும் என்று தெரிகிறது.

Advertisement