- Advertisement -

இந்தியா இதை செய்யாம விட்டா.. அப்றம் பும்ரா வந்தாலும் ஜெய்க்க வைக்க முடியாது.. எச்சரித்த அஸ்வின்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமையால் ஓய்வெடுக்க உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

ஒருவேளை அவர் இரண்டாவது போட்டியில் விளையாடாமல் போனால் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியம் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே அவரைத் தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக பவுலிங் செய்தது இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது. இந்நிலையில் இந்தியா இத்தொடரை வெல்ல வேண்டுமெனில் இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாட வேண்டுமென ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பும்ரா கண்டிப்பாக வேணும்:

ஏனெனில் 2வது போட்டியில் தோற்று விட்டால் அதன் பின் பும்ராவை வைத்து கூட இந்தியாவால் கம்பேக் கொடுப்பது கடினமாகி விடும் என்றும் அஸ்வின் எச்சரித்துள்ளார். வேண்டுமானால் 3, 4வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஓய்வெடுக்கலாம் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் பும்ரா விளையாட வேண்டுமா? என்ற பேச்சுக்கள் காணப்படுகிறது”

“ஆம் பும்ரா விரும்பினால் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஏனெனில் 1 – 0 என்ற கணக்கில் நாம் பின்தங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில் அவர் விளையாடுவது மிகவும் பெரிய விஷயம். பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார் என்பது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும். முதல் போட்டி முடிந்த பின் நமக்கு 10 நாட்கள் இடைவெளி கிடைத்தது”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“எனவே 2வது போட்டியில் விளையாட அவர் தயாராக இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை 2வது போட்டியில் இந்தியா வென்று 1 – 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தால் பும்ராவை 3 அல்லது 4வது போட்டிகளில் ஓய்வெடுக்க வைக்கலாம். ஒருவேளை 2வது போட்டியில் தோற்றால் அவரை 4வது போட்டியில் மட்டும் விளையாட வையுங்கள். சூப்பர் ஸ்டார் வீரரான அவர் இந்தியாவின் வெற்றிக்காகவே விளையாடுகிறார்”

இதையும் படிங்க: அவரை வாங்குறதுல எந்த பிரச்சனையும் இல்ல.. சஞ்சு சாம்சன் வரவு குறித்து முக்கிய தகவலை – வெளியிட்ட நிர்வாகி

“அதனால் வெற்றி பறிபோன பின் கடைசியில் விளையாடி என்ன பயன்? அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து மீண்டும் வந்த போதெல்லாம் அவர் அபாரமாக விளையாடியுள்ளார். எனவே பும்ரா 2வது போட்டியில் விளையாட வேண்டும். வெளிநாட்டில் நடைபெறும் இந்த தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கி விட்டால் மீண்டும் வந்து தொடரை பிடிப்பது கடினமாகி விடும்” எனக் கூறினார்.

- Advertisement -