
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி துவங்கும் அத்தொடரின் முதல் போட்டியை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும்
இந்திய அணியில் துருவ் ஜுரேல் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி ராஞ்சியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போதிலிருந்து ரிசப் பண்ட் விளையாடாத சமயங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பில் நன்றாக விளையாடி வரும் ஜுரேல் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சதத்தை அடித்து அசத்தினார்.
அத்துடன் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்த ஜுரேல் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். மறுபுறம் கடந்த இங்கிலாந்து தொடரில் காயமடைந்த ரிசப் பண்ட் மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் ஜுரேலை யாருக்கு பதிலாக பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது என்ற கேள்விக்கு காணப்படுகிறது.
அது போன்ற சூழ்நிலையில் சாய் சுதர்சனுக்கு பதிலாக அவரை 3வது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று தீப்தாஸ் குப்தா போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நித்திஷ் ரெட்டிக்கு பதிலாக ஜுரேலை 6வது இடத்தில் விளையாட வைக்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். குறிப்பாக கொல்கத்தாவில் 2 வேகப்பந்து வீச்சாளர் போதும் என்பதால் ஜுரேலை விளையாட வைக்கலாம் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாய் சுதர்சன் இடம் பற்றி எந்த விவாதங்ககளும் இல்லை. துருவ் ஜுரேல் லோயர் ஆர்டரில் விளையாட வரலாம். உங்களுக்கு நிதிஷ் ரெட்டி தேவையில்லை. ஏனெனில் உங்களுக்கு 3 ஸ்பின்னர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள். அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜுரேல் போன்றவரை தயவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் நன்றாக அசத்துவார்”
இதையும் படிங்க: அது ஓவர்ரேட்டட்.. இந்திய பேட்டிங் வரிசை இசைநாற்காலி போல மாற்றப்படுவது ஏன்? கோச் கம்பீர் விளக்கம்
“2024 இங்கிலாந்து தொடரில் ராஞ்சியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தனது வாழ்வின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக அவர் அடித்த 2 சதங்களில் முதலாவது சதம் இந்தியா தடுமாறிய போது வந்தது. எனவே அணி நிர்வாகம் அவரை விளையாட வைக்க முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.