அது ஓவர்ரேட்டட்.. இந்திய பேட்டிங் வரிசை இசைநாற்காலி போல மாற்றப்படுவது ஏன்? கோச் கம்பீர் விளக்கம்

Gautam Gambhir 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா நல்ல வெற்றிகளைப் பெற்று நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தொடரை வென்ற இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் டி20 அணியில் கௌதம் கம்பீர் செய்யும் மாற்றங்கள் மற்றும் தேர்வுகள் பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைகிறது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் போன்ற திறமையை நிரூபித்த வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மறுபுறம் இதுவரை அசத்தாத ஹர்ஷித் ராணாவுக்கு 3 வகையான இந்திய அணியிலும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

- Advertisement -

பேட்டிங் ஆர்டர் ஓவர்ரேட்டட்:

அத்துடன் பேட்டிங் வரிசையில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களின் இடங்கள் இசை நாற்காலி போல மாற்றப்பட்டு வருக்கிறது. குறிப்பாக கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிவம் துபேவுக்கு மேலே ஹர்ஷித் ராணா விளையாடினார். கேப்டன் சூரியகுமார், திலக் வர்மா, அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோர் நிலையாக அல்லாமல் மாறி மாறி பல்வேறு இடங்களில் களமிறங்கினர்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டர் என்பது ஓவர்ரேட்டட் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனாலேயே அதை ஒரே மாதிரியாக வைத்திருக்காமல் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் வெற்றியை பெறுவதற்காக மாற்றி மாற்றி பயன்படுத்துவதாகவும் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “இலங்கையில் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை அதுவே சித்தாந்தமாக இருக்கிறது”

- Advertisement -

கம்பீர் விளக்கம்:

“ஓப்பனிங் தவிர்த்து பேட்டிங் ஆர்டர் என்பது மிகவும் ஓவர்ரேட்டட் என்று நினைக்கிறேன். 2 துவக்க வீரர்கள் நிரந்தரமானவர்கள். மற்ற அனைவரும் கலக்கப்படுவார்கள். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் முக்கியம் கிடையாது, நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமே முக்கியம். சில நேரங்களில் மக்கள் அதை மிகவும் தவறாகக் கணக்கிடுகிறார்கள்”

இதையும் படிங்க: முகமது ஷமி கிட்ட கண்டிப்பா அதற்கான காரணத்தை சொல்லணும்.. ஷமியின் நீக்கம் குறித்து – கங்குலி பேச்சு

“அல்லது பேட்டிங் ஆர்டர், ரன்கள் மற்றும் தாக்கம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வித்யாசங்களை அவர்கள் தவறாக புரிந்து கொள்கின்றார்கள். அதுவே முதல் நாளிலிருந்து நான் பின்பற்றும் காரணமாகும். பேட்டிங் வரிசை திரவத்தைப் போல் இருக்க வேண்டும். அப்படித்தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். நாங்கள் சராசரி, ஸ்ட்ரைக் ரேட், ரன்கள் போன்ற மற்ற விஷயங்களுக்காக விளையாடுவதில்லை” என்று கூறினார்.

Advertisement