2019இல் விராட் கோலி சொன்னதை இந்திய அணிக்காக.. பிசிசிஐ செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் விராட், ரோஹித், அஸ்வின் போன்ற நட்சத்திர சீனியர்கள் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. அதனால் இந்தியா விளையாடிய போட்டியை மைதானத்துக்கு சென்று பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

அதனாலேயே அவ்விரு போட்டிகளிலும் பெரும்பாலான மைதானம் காலியாக இருந்தது என்றே சொல்லலாம். அத்துடன் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியின் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் நடைபெற வேண்டும் என்று 2019இல் விராட் கோலி சொன்னதை அமல்படுத்தும் நேரம் வந்துள்ளதாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2019லேயே சொன்ன கோலி:

அதாவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகள் குறிப்பிட்ட வயதானங்களில் மட்டுமே நடைபெறும். அது போல இந்தியாவில் கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டுமென விராட் கோலி கேட்டுக்கொண்டார். அப்படி செய்வதால் ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என்றும் ஒரே மாதிரியான மைதானங்களில் விளையாடினால் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்த முடியும் என்றும் விராட் தெரிவித்திருந்தார்.

அது பற்றி தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிக்கான மைதானங்கள் ரசிகர்களை பற்றியது மட்டும் கிடையாது. அது ஒரே மாதிரியான சூழ்நிலைகளையும் கொடுக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக நாம் ராஞ்சி அல்லது கௌகாத்தியில் விளையாடுவதை எதிர்க்கவில்லை. ஆனால் அங்கே விளையாடுவதால் பிட்ச் வெவ்வேறு அடையாளங்களை கொண்டிருக்கும் என்பது இந்திய அணிக்கு பிரச்சனையாகும்”

- Advertisement -

நேரம் வந்தாச்சு:

“அம்மைதானங்கள் வடகிழக்கு பகுதியில் இருப்பதால் பவுன்ஸ் இருக்காது. அதனால் அது சாதாரண டெஸ்ட் போட்டியாகவே அமையும். நீங்கள் சிறந்த பிட்ச் கொண்ட மைதானங்களில் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். சில மைதானங்களின் சூழ்நிலைகள் நமது அணிக்கு தெரியாது. ஆனால் சில மைதானங்களில் நம்முடைய அணி அதிகமாக விளையாடி பழகியிருப்பார்கள். எனவே அங்கே விளையாடவிட்டால் இந்தியாவுக்குள் விளையாடினாலும் உங்களுக்கு சொந்த மண்ணில் கிடைக்க வேண்டிய சாதகம் கிடைக்காது”

இதையும் படிங்க: வெறும் 93க்கு அவுட்.. 200 ரன்ஸ்.. ஓடவிட்ட ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய வெற்றி.. வங்கதேசம் மோசமான சாதனை

“அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி கொல்கத்தா, கௌதாத்தியில் விளையாட உள்ளது. ஆனால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்த மைதானங்களாக இருக்குமா? தற்போதைய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் கௌகாத்தியில் விளையாடியிருக்க மாட்டார்கள். இந்தப் பிரச்சனையை தீர்க்குமாறு விராட் 6 வருடத்திற்கு முன்பே சொன்னார். எனவே அதற்கான நேரம் வந்து விட்டதாக நானும் கருதுகிறேன். நாம் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான மைதானங்களை உருவாக்கக்கூடாது?” என்று கூறினார்.

Advertisement