அதுக்காகத் தான் சரவெடியா ஆடுனோம்.. ரோஹித் சொன்னதை செஞ்சது அபாரம்.. தொடர்நாயகன் அஸ்வின் பேட்டி

R ashwin 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை முறையே 233 மற்றும் 146 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்தியாவுக்கு பும்ரா 6, அஸ்வின் 5, ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மோனிமுள் ஹைக் 107*, சாத்மன் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய இந்திய அணி முறையே 285-9, 98-3 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. குறிப்பாக 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தொடர்நாயகன் அஸ்வின்:

ஆனால் 4வது நாளில் முதல் இன்னிங்ஸில் சரவெடியாக விளையாடிய இந்தியா 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 மற்றும் 51, விராட் கோலி 47 மற்றும் 29, ராகுல் 68, கில் 39 ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்தது.

இந்த வெற்றிக்கு தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி முக்கிய பங்காற்றிய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 2025 ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்காகவே இப்போட்டியில் மழையையும் தாண்டி அதிரடியாக விளையாடி வென்றதாக அஸ்வின் கூறியுள்ளார். அதற்கான திட்டத்தை வகுத்த ரோஹித் சர்மா அதை முதல் பந்திலேயே சிக்சர் அடித்து செய்து காட்டியது அபாரம் என்றும் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அபாரமான ரோஹித்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அணிக்காக என்னுடைய செயல்பாடுகளை திருப்பியது நன்றாக அமைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இடத்தைப் பிடிக்க இது அற்புதமான வெற்றி. வங்கதேசத்தை நான்காவது நாள் உணவு இடைவெளிக்கு பின் அவுட்டாக்கிய போது “நாம் 230க்கு அவுட்டானாலும் பரவாயில்லை. வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும்” என்று ரோஹித் எங்களிடம் சொன்னார்”

இதையும் படிங்க: 2.5 நாட்கள் வேஸ்ட்டா போச்சு.. அதனால் தான் தைரியமா முடிவு எடுத்தேன்.. வெற்றிக்கு பிறகு – ரோஹித் ஹேப்பி

“அதை களத்திற்கு சென்று பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே சிக்சர் விளாசி செய்து காட்டிய அவர் இந்த வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். சொல்வது எளிது. ஆனால் சொன்ன சொல்லில் ரோகித் சர்மா போல நடப்பது அபாரமானது. பும்ரா, ஆகாஷ், சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். ஜடேஜாவை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் கேரம் பந்துகளை அதிகம் பயன்படுத்துவதில்லை. என்னுடைய ரிதத்தில் செட்டிலானது மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement