ஆஸ்திரேலியாவில் 2025 – 26 ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி துவங்கியது. பெர்த் மைதானத்தில் துவங்கிய அத்தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை நன்றாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 172 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 56, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 123/9 என திணறி வருகிறது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் க்ரீன் 24 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக 5* விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்தியான்னா தகரம்:
அந்த வகையில் இந்தப் போட்டியின் முதல் நாளிலேயே கொத்தாக 19 விக்கெட்டுகள் விழுந்தன. அதனால் கடந்த 100 வருடங்களில் நடைபெற்ற ஆஷஸ் போட்டிகளில் முதல் நாளிலேயே அதிக விக்கெட் விழுந்த போட்டியாக இப்போட்டி மோசமான சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு பெர்த் மைதானத்தின் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக ஒருதலை பட்சமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
இருப்பினும் அதைப்பற்றி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாருமே இதுவரை பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் மிகவும் மோசமான பிட்ச்சாக இருந்ததாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர்.
வெளிநாடுன்னா தங்கம்:
குறிப்பாக கொல்கத்தா பிட்ச் மோசமாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்தார். ஆனால் தற்போது பெர்த் பிட்ச்சில் இங்கிலாந்தின் பவுலிங் அபாரமாக இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பிட்ச்சுகளை தகரத்தைப் போல் விமர்சிக்கும் மைக்கேல் வாகன் போன்ற வெளிநாட்டவர்கள் தங்களுடைய நாட்டில் இருக்கும் பிட்ச்களை தங்கமாக பாவிப்பதாக ரவிசந்திரன் அஸ்வின் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: 194 ரன்ஸ்.. சூப்பர் ஓவரில் வங்கதேசத்திடம் சொதப்பிய இந்தியா.. ரைசிங் ஆசியக் கோப்பையில் சோகம்
இது பற்றி அவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பெர்த்தில் இன்று 19 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. ஆனால் அது கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான நாள் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இதுவே நாளை கௌகாத்தியில் (இந்தியா – தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் மைதானம்) நடைபெற்றால் என்னவாகும்? இவை அனைத்தும் இரட்டை தரநிலையாகும்” என்று கூறினார்.



