3வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இணையும் அஸ்வின்.. எப்போது வருவார்? பவுலிங் செய்ய முடியுமா? பிசிசிஐ அறிவிப்பு

- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து கடைசி நேரத்தில் சுமாராக செயல்பட்டு 319 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கெட் அதிரடியான சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

மீண்டும் அஸ்வின்:
இருப்பினும் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக அவர் இந்த போட்டியிலிருந்து இரண்டாவது நாள் இரவோடு இரவாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மேலும் தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காகவே அவசர அவசரமாக அஸ்வின் பாதியிலேயே விலகியதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக இப்போட்டியில் மேற்கொண்டு அஸ்வின் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 3வது போட்டியின் நான்காவது நாளிலிருந்து அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நான்காவது நாள் உணவு இடைவேளைக்கு பின் இந்திய அணியுடன் அஸ்வின் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பொதுவாக தண்ணீர் குடிப்பதற்கு களத்தை விட்டு வெளியே சென்றால் கூட அதற்கு அதற்கு நிகரான நேரம் முடிந்த பின்பே அந்த வீரர் களத்திற்குள் அனுமதிக்கப்படுவார் என்பது அடிப்படை விதிமுறையாகும். ஆனால் இங்கே குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக நடுவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தான் அஸ்வின் வெளியேறினார்.

இதையும் படிங்க: ரோஹித் கேப்டன்ஷிப்ல பின்னிட்டாரு.. அந்த ஒரு விக்கெட்டால் போட்டியே தலைகீழா மாறிடுச்சு.. நிக் நைட் ஆதங்கம்

எனவே அடிப்படை விதிமுறையை தாண்டி சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு இப்போட்டியில் நடுவர்கள் ஸ்பெஷல் அனுமதியை கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாக 4வது நாள் உணவு இடைவெளியில் அஸ்வின் இணையும் போது வழக்கம் போல பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய முடியும் என்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா 256/3 ரன்கள் எடுத்து மொத்தம் 382 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement