ரோஹித் கேப்டன்ஷிப்ல பின்னிட்டாரு.. அந்த ஒரு விக்கெட்டால் போட்டியே தலைகீழா மாறிடுச்சு.. நிக் நைட் ஆதங்கம்

Nick Knight
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமாக விளையாடி 319 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறிப்பாக பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 153 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 224/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அந்த அணியை அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

முக்கிய விக்கெட்:
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அபாரமான சதமடித்து 104*, சுப்மன் கில் அரை சதமடித்து 65* ரன்கள் எடுத்தனர். தற்போதைய நிலைமையில் இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளில் ரோகித் சர்மாவின் அபாரமான கேப்டன்ஷிப் அபாரமாக இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் நைட் பாராட்டியுள்ளார்.

மறுபுறம் ஜோ ரூட் தேவையின்றி பும்ராவுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது இங்கிலாந்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கியதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் பஸ்பாலை பற்றி பேசுகிறோம். தற்போது அது கடினமான நேரங்களில் எப்படி வேலை செய்யாது என்பதை பற்றி நாம் பேசப்போகிறோம்”

- Advertisement -

“அது உண்மையாக பஸ்பால் என்று நான் கருதவில்லை. இந்த சிறப்பான நாளில் இந்தியா அசத்தலாக பந்து வீசியதற்கு நீங்கள் பாராட்ட தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ரோகித் சர்மா தன்னுடைய அணியை சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார் என்று நினைக்கிறேன். ஜோ ரூட் அவுட்டானதிலிருந்து அனைத்தும் இங்கிலாந்துக்கு தவறாக மாறியது. அங்கிருந்து இங்கிலாந்து மீண்டதாக நான் கருதவில்லை”

இதையும் படிங்க: வெறும் 1 விக்கெட் 4 ரன்ஸ்.. போராடிய இப்ராஹிம்.. அசத்திய பதிரனா.. கடைசி ஓவரில் வெற்றி கைமாறியது எப்படி?

“எனவே இங்கிலாந்துக்கு மேல் சற்று இந்தியா சென்றதாக நான் கருதுகிறேன். குறிப்பாக ஜோ ரூட்டின் விக்கெட் தற்காலிக திருப்புமுனையை ஏற்படுத்தியது. இருப்பினும் இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் இங்கிலாந்தை முடிந்ததாக எழுதக்கூடாது என்பது அவர்களைப் பற்றிய நேர்மறையான அம்சமாகும். இப்படி சொல்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள். தற்சமயத்தில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு இருந்தாலும் இன்னும் நமக்கு நல்ல போட்டி காத்திருக்கிறது” என்று கூறினார்.

Advertisement