கேம் சேஞ்சர் ஸ்ரேயாஸ் ஐயர் இதை செய்வதாலேயே.. விராட் கோலியால் அசத்த முடிகிறது.. அஸ்வின் பாராட்டு

R ashwin 3
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி துபாயில் நடக்கிறது. அதில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி நங்கூரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் இத்தொடரில் மிடில் ஆடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் உண்மையிலேயே பேட்டிங் துறையில் இந்தியாவின் கேம் சேஞ்சராக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் ஸ்பின்னர்களை அவர் நன்றாக எதிர்கொள்வதைப் பயன்படுத்தியே மறுபுறம் விராட் கோலி அசத்துவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கேம் சேஞ்சர் ஸ்ரேயாஸ்:

“என்னைப் பொறுத்த வரை தற்போதைய ஃபார்ம் காரணமாக ஃபைனலில் ஸ்ரேயாஸ் ஐயர் கேம் சேஞ்சராக இருப்பார். 2023 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் நியூசிலாந்துக்கு எதிராக மும்பையின் நன்றாக பேட்டிங் செய்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் தன்னுடைய ஆட்டத்தில் நன்றாக வேலை செய்துள்ளார். கடந்தப் போட்டியில் அந்த பந்தில் அவர் அவுட்டானாலும் அது பிரச்சனை இல்லை”

“தாம் எந்த விஷயத்தில் நன்றாக இல்லையோ அதில் முன்னேற விரும்புவதே ஸ்ரேயாஸ் ஐயரின் மிகப்பெரிய பலமாகும். அவர் விளையாடும் விதம் விராட் கோலிக்கு உதவுகிறது. சுழல் பந்துகளுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடுவது விராட் கோலி தனது வழியில் விளையாட உதவுகிறது. அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை நீக்குகிறார். அந்த இருவருமே மிடில் ஆர்டரில் சிறந்த ஜோடியாக உருவெடுத்துள்ளனர்”

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

“விராட் கோலியின் வெற்றிகரமான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஒரு அங்கமாக இருக்கிறார். இதையே மக்கள் பார்ட்னர்ஷிப் என்று சொல்வார்கள். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயாஸை அட்டாக் செய்தால் எதிர்ப்புறம் விராட் கோலி எளிதாக ரன்கள் குவிப்பார். ஸ்பின்னர்களை ஸ்ரேயாஸ் நன்றாக எதிர்கொள்ளும் நோக்கிலேயே இந்த ஜோடி உருவாக்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க: 9 ஊருக்கு அலைஞ்சப்போ யாருமே பேசல.. இதுக்கு ஜெய் ஷா காரணமில்ல.. மில்லருக்கு அஸ்வின் பதிலடி

“துபாய் போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சுழலுக்கு எதிராக சோக் செய்வதை அனுமதிக்க முடியாது. அதை சமாளிக்கும் வகையிலேயே ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்து வருகிறார். ஒருவேளை அவர் அவுட்டானால் அது பிரச்சனை. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இறுதிப் போட்டியில் கேம் சேஞ்சராக இருப்பார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement