மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாடின. அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு செல்லாத இந்தியா தங்களதுப் போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அதில் தங்களது குரூப் சுற்றில் வங்கதேசம் நடப்புச் சாம்பியன், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடைப்பெற்ற செமி ஃபைனல் சுற்றில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோற்றது. இருப்பினும் செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க தகுதிப் பெற்றது.
இந்தியாவுக்கு சாதகமா:
இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இந்தத் தொடரில் துபாயில் ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் என்று மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் இந்தியாவால் துபாய்க்கும் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும் மாறிமாறி அலைந்தது செமி ஃபைனலில் தங்களுடைய தோல்விக்கு ஒரு காரணமானதாக தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் விமர்சித்தார்.
இந்நிலையில் அவருக்கும் இந்திய அணியை விமர்சிப்பவர்களுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்துள்ள பதிலடி பின்வருமாறு. “சிறந்த செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தொடர்கள் வெல்லப்படும். சாக்கு சொல்வதன் அடிப்படையில் அல்ல. இந்திய அணிக்கு துபாயில் சாதகம் இருப்பதாக சொல்பவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது”
அஸ்வின் பதிலடி:
“2009 சாம்பியன்ஸ் ட்ராபியில் தென்னாப்பிரிக்கா ஒரே மைதானத்தில் விளையாடியது. ஆனால் அத்தொடரில் ஃபைனலுக்கு தகுதி பெறாதது அந்த அணியின் தவறல்ல. நன்றாக விளையாடிய அணிகள் மட்டுமே தகுதி பெற்றன. அதே போல இந்தியா திடமான கிரிக்கெட்டை விளையாடியதாலேயே ஃபைனலில் இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் டெஸ்ட் அணிகள் தோல்வியை சந்தித்த பின் இங்குள்ள பிட்ச் அதற்கு காரணம் என்று சொல்வது எனக்குத் தெரியும். ஆனால் வெளிநாட்டில் தோற்றால் இந்தியா அதை நாங்கள் சொல்வதில்லை”
இதையும் படிங்க: அந்த இந்திய பவுலர் தான் நான் விளையாடுனதுலேயே கஷ்டமான பவுலர் – கேன் வில்லியம்சன் பகிர்வு
“இந்தியா அடுத்தடுத்தக் கோப்பைகளை வென்றால் அதைக் கொண்டாடுவோம். அதை விட்டுவிட்டு விமர்சிக்காதீர்கள். 2023 உலகக் கோப்பையில் இந்தியா 9 வெவ்வேறு மைதானத்திற்கு பயணித்து விளையாடியது. அந்த அணியில் நானும் இருந்தேன். ஒன்றரை மணி நேரம் விமானத்தில் பயணித்தது உங்களது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டேவிட் மில்லர் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அது இந்திய அணியின் கைகளில் இல்லை. ஐசிசி அட்டவணையை உருவாக்கியது. ஒரு இந்தியர் (ஜெய் ஷா) தலைவராக வருவதற்கு முன்பே அது உருவாக்கப்பட்டது” என்று கூறினார்.



