- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த அரிதான திறமை கொண்ட ரிஷப்பை.. தோனிக்கு பதில் கோலியுடன் கம்பேர் பண்ணனும்.. அஸ்வின் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதன் காரணமாக ஒரே போட்டியில் 134, 118 என 2 சதங்கள் அடித்த ரிஷப் பண்ட் போராட்டம் வீணானது.

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இன்னிங்சிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய கீப்பர் என்ற தோனியின் (6) வாழ்நாள் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனையை (7) படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கீப்பர் என்ற தோனியின் (78) சாதனையையும் உடைத்த அவர் புதிய சாதனையை (79) படைத்தார்.

- Advertisement -

தோனியுடன் ஒப்பிடாதீங்க:

அதன் காரணமாக தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சிறந்த கீப்பர் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ரிஷப் பண்ட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனிக்கு பதிலாக விராட் கோலி போன்ற முதன்மை பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடப்பட வேண்டியவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“எம்எஸ் தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது ஒருபோதும் நியாயமல்ல. ஏனெனில் தோனி பெரும்பாலும் 5வது இடத்தில் விளையாடியதில்லை. தோனி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஆனால் ரிஷப் பண்ட்டை பேட்ஸ்மேன் கீப்பர் என்று சொல்லலாம். அவரை விராட் கோலி போன்றவர்களுடன் ஒப்பிட வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட் தற்போது முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்”

- Advertisement -

அஸ்வின் கருத்து:

“அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. பொதுவாக முழுமையான ஸ்பெஷல் பேட்ஸ்மேன்கள் பந்தை முன்னதாகவே பிடித்து அடிக்கும் சாமர்த்தியம் கொண்டிருப்பார்கள். அவர்கள் லைன், லென்த் ஆகியவற்றை வேகமாக பிடித்து அடிப்பார்கள். ரிஷப் பண்ட் கீப்பராக இருந்தாலும் அந்த அரிதான ஸ்பெஷல் திறன்களைக் கொண்டுள்ளார். என்னைப் பொறுத்த வரை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்களை விட நேரத்தை அதிகமாக எடுத்து விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: ஆமைவேக ராகுலை மறுபடியும் அட்டாக் ராகுலாக மாற்ற ரோஹித் தான் காரணம்.. அபிஷேக் நாயர் பேட்டி

“நீங்கள் 5வது நாள் வரை உங்களுடைய பேட்டிங்கை அதிகப்படுத்தாததால் போட்டி முடிந்து விட்டது. அதன் காரணமாக நீங்கள் எந்த இலகை கொடுத்தாலும் அதை நாங்கள் அடிப்போம் என்று இங்கிலாந்து விளம்பரப்படுத்தினார்கள். எனவே அடுத்த முறை இங்கிலாந்துக்கு குறைந்த நேரமும் அதிக இலக்கையும் கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -