இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து போராடினார். ஆனால் மற்ற பவுலர்கள் கை கொடுக்கத் தவறியதால் இந்தியா பரிதாபமாக தோற்றது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை பவுலர் என்பதால் இந்திய ரசிகர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு நிகராக கொண்டாடுவதில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தம்மைப் பொறுத்த வரை விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை விட பும்ரா சிறந்தவர் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். எனவே சச்சின், ரோஹித், கோலிக்கு கொடுக்கும் அதே மரியாதையை அவருக்கும் கொடுக்க வேண்டும் என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சச்சின் போல பும்ரா:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவை நான் நிறைய பாராட்டியுள்ளேன். அவரும் இந்த உலகத்தில் தான் பிறந்துள்ளதால் அவரைப் பற்றி மிகவும் அதிகமாக சொல்லி மார்க்கெட்டிங் செய்ய நான் டிராமா ஆர்டிஸ்ட் கிடையாது. பும்ரா அற்புதமான கிரிக்கெட்டர். ஆனால் இப்போதும் நாம் சச்சின், கோலி, ரோஹித் ஆகியோருக்கு செய்வதை நாம் பும்ராவுக்கு செய்வதில்லை என்று சொல்வேன்”
“பும்ரா மற்ற பவுலர்கள் செய்வதை விட அதிகமாகவே பங்காற்றுகிறார். நிறைய மரியாதையைப் பெற்றுள்ள அவர் நிறைய ரசிகர்களையும் அன்பையும் பெற்றுள்ளார். அவருடைய மனைவி அவரது நம்பர் ஒன் ரசிகராக இருக்கலாம். ஆனால் நான் அவருடைய நம்பர் ஒன் ரசிகன். மிகவும் வித்தியாசமான உலகத்தில் இருக்கும் அவரிடம் தனித்துவமான ஆக்சன் மட்டுமின்றி திட்டங்களை செயல்படுத்துவதில் தரம் இருக்கிறது”
நம்பர் ஒன் ரசிகன் அஸ்வின்:
“ஜோ ரூட்டை முதல் இன்னிங்ஸில் அவர் திணற வைத்த விதம் சிறப்பானது. அவருடைய லென்த்தை அடிக்க முடியாமல் ரூட் தடுமாறினார். மற்ற பவுலர்களை பின்னங்காலில் எதிர்கொண்ட அவரால் பும்ராவை எதிர்கொள்ள முடியாது. அந்த வகையில் பும்ரா மிகவும் வித்தியாசமான விமானத்தில் இருக்கக்கூடியவர்”
இதையும் படிங்க: இந்தியர்களின் நவம்பர் 19 வேதனைக்கு பதிலடியா ஆஸியை அடித்து நொறுக்கி வீட்டுக்கு அனுப்புனேன்.. ரோஹித் பேட்டி
“ஜஸியுடன் (பும்ரா) சேர்ந்து நானும் விளையாடினேன், அவருக்கு எதிராக பேட்டிங் செய்துள்ளேன் என்று பெருமையாக சொல்வேன். அவருடன் சேர்ந்து சில அற்புதமான வெற்றிகளையும் பார்த்துள்ளேன். பும்ரா ஜாம்பவான்களின் பட்டியலில் ஒருவராக இருப்பார். இல்லையென்றாலும் கூட நம்முடைய நாட்டைச் சேர்ந்த சிலர் பேட்ஸ்மேன்களை விட அவர் சிறந்தவராகவே இருக்கிறார்” என்று கூறினார்.



