ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்றதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. ஏனெனில் தோனி தலைமையில் இந்தியா 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பின் தொடர்ந்து இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக செமி ஃபைனல், ஃபைனல் போன்ற நாட் அவுட் போட்டி வரை சென்று இந்தியா தோற்றது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
அதன் உச்சமாக 2023 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளைப் பற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. குறிப்பாக செமி ஃபைனலில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா சாதனை படைத்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று அனைத்து ரசிகர்களுக்கும் நம்பிக் கொண்டிருந்தனர்.
நவம்பர் 19 வேதனை:
ஆனால் அஹமதாபாத் நகரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 5வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. அன்றைய நாளில் 140 கோடி இந்தியர்களை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து சைலன்ட் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் சொன்னது ரசிகர்களின் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்தது.
அதற்கு பதிலடியாக 2024 டி20 உலகக் கோப்பையில் கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா 92 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த தோல்வியுடன் ஆப்கானிஸ்தானிடமும் தோற்றதால் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது.
காத்திருந்து அடிச்சோம்:
இந்நிலையில் 2023 தோல்விக்கு பழி தீர்க்கும் நோக்கத்திலேயே 2024 டி20 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பியதாக ரோகித் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோல்வியால் ஏற்பட்ட கோபம் எப்போதும் என்னுடைய மனதின் பின்புறத்தில் இருந்தது. ஆஸ்திரேலிய எங்களின் நவம்பர் 19 வெற்றியை பாழாக்கினர்”
இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி இல்லாம.. கேஎல் ராகுல் நாட்டுக்காக இதை செஞ்சது பாராட்டுக்குரியது.. பதானி பாராட்டு
“எனவே அவர்களுக்காக நாங்கள் சிலவற்றை கொடுக்க காத்திருந்து வைத்திருந்தோம். அவர்களுக்கு நல்ல பரிசையும் திருப்பிக் கொடுத்தோம். அந்தத் தோல்வி பற்றி இந்திய அணியில் நாங்கள் தொடர்ந்து பேசினோம். அது உங்களுடைய மனதில் இருந்தாலும் பேட்டிங் செய்யும் போது அதைப்பற்றி சிந்திக்க மாட்டீர்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணங்களுடன் பேட்டிங் செய்ய மாட்டீர்கள்” எனக் கூறினார்.



