
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. அதையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து 23ஆவது வருடமாக 10வது டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்கடித்து சாதனை படைத்தது. முன்னதாக அத்தொடரில் அக்சர் பட்டேல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் ரவிச்சந்திரன் அஸ்வின் – ரவீந்திர ஜடேஜா ஜோடியாக ராஜாங்கம் நடத்திய காலத்திலேயே அறிமுகமான அவர் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் அவர் ஆல் ரவுண்டராக விளையாடி அசத்தினார். அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பெஞ்சில் அமர வைத்தார்.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான நித்திஷ் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பில் 2 போட்டிகளில் 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய அவர் பேட்டிங்கில் கணிசமான ரன்கள் மட்டும் எடுத்தார். இந்நிலையில் இதற்கு பேசாமல் அக்சர் பட்டேல் விளையாடலாமே? என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மறைமுகமாக சாடியுள்ளார்.
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இது தான் நிதிஷ் ரெட்டியின் வேலை என்றால் அதற்கு நீங்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் அல்லது பவுலரை விளையாட வைக்கலாம் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக நீங்கள் அக்சர் பட்டேலை விளையாட வைக்கலாம். மேட்ச் வின்னரான அவர் எதைக் குறைவாக செய்தார்? நித்திஷ் ரெட்டியை வைத்துக்கொண்டு உங்களுக்கு எக்ஸ்ட்ரா பவுலர் தேவை என்று நான் சொல்லவில்லை”
“அது போன்ற நிலைமை தேவையில்லை என்றால் நீங்கள் பேட்ஸ்மேனை மட்டும் விளையாட வையுங்கள். அந்த வேலையில் நித்திஷை விட அக்சர் பட்டேல் ஏற்கனவே இந்தியாவுக்காக நன்றாக விளையாடியுள்ளார். ஸ்பின்னர்களுக்கு அவர் எதிராக சிறந்த தடுப்பாட்டத்தைக் கொண்டுள்ளார். சிராஜ், பும்ரா ஆகியோர் விளையாடும் போது நீங்கள் நித்திஷ் ரெட்டியை பேட்டிங் ஆழத்திற்காக விளையாட வைக்கலாம்”
இதையும் படிங்க: ஷமியின் ரசிகனாக நானே சொல்றேன்.. இந்த காரணத்தால் இந்தியா இனிமேல் சான்ஸ் தரமாட்டாங்க.. ஏபிடி
“இல்லையென்றால் அவரை விளையாட வைப்பதில் அர்த்தமில்லை. நிதிஷ் நல்ல பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய வேலையில் தெளிவு இருக்க வேண்டும்” என்று கூறினார். அது பற்றி கேட்டதற்கு இளம் வீரரான நித்திஷ் ரெட்டி அனுபவத்தைப் பெறுவதற்காக வாய்ப்பளித்தேன் என்று கௌதம் கம்பீர் சொன்னது குறிப்பிடத்தக்கது.