இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடினார். அத்தொடரில் நெருப்பாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனலுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழுமையாக குணமடையாததால் 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து உள்ளூரில் விளையாடிய ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வானார். அத்தொடரில் ஓரளவு நன்றாக பந்து வீசிய அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஷமி முழுமையாக ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டது.
வேகம் குறைந்த ஷமி:
அத்துடன் அறுவை சிகிச்சைக்கு பின் ஷமி நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். அதைக் கேட்டு ஏமாற்றமடைந்த ஷமி ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருக்கும் தாம் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட மாட்டேனே? என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தம்முடைய ஃபிட்னஸ் பற்றிய அப்டேட்டை தேர்வுக்குழு தாமாக கேட்க வேண்டுமே தவிர தாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் காயத்துக்கு பின் முகமது ஷமி பழைய வேகத்தில் பந்து வீச தடுமாறுவதாலேயே கழற்றி விடப்பட்டுள்ளதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்திய அணியிடமிருந்து மிகப்பெரிய முடிவு. அவர்கள் ஷமியிடமிருந்து நகர்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனுடைய பின்னணி எனக்குத் தெரியாது”
பகிர்ந்த ஏபிடி:
“ஒருவேளை அவர் லேசான காயத்தைக் கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவேளை அவருடைய வழக்கமான வேகத்தில் ஒரு கெஜம் குறைந்துள்ளது அணியில் இடத்தை இழக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம். அதற்காக அவருடைய சாலை முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. சமீப காலங்களில் அவரது வேகம் ஒரு கெஜம் தொலைந்துள்ளது”
இதையும் படிங்க: இந்திய சாம்பியன்கள் விராட், ரோஹித்தை கடைசியாக பாத்துக்கோங்க.. நான் இல்லாதது அவமானம்.. கமின்ஸ் பேட்டி
“அதுவே இனிமேலும் அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போக ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் அவர் கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம். ஏனெனில் நானும் அற்புதமான பவுலரான அவருடைய ரசிகன். ஃபிட்டாக ஃபார்மில் இருக்கும் போது அவர் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலராக உங்களுடைய அணியில் சொத்தாக இருப்பார். எப்படி இருந்தாலும் நல்ல வீரரான அவர் அணியில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று கூறினார்”



